/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமைதி ரொம்ப முக்கியம்! ராமலிங்க ரெட்டி 'அட்வைஸ்' அமைதி ரொம்ப முக்கியம்! ராமலிங்க ரெட்டி 'அட்வைஸ்'
அமைதி ரொம்ப முக்கியம்! ராமலிங்க ரெட்டி 'அட்வைஸ்'
அமைதி ரொம்ப முக்கியம்! ராமலிங்க ரெட்டி 'அட்வைஸ்'
அமைதி ரொம்ப முக்கியம்! ராமலிங்க ரெட்டி 'அட்வைஸ்'
ADDED : ஜூன் 27, 2025 11:19 PM

பெங்களூரு: “மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பினால், முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்,” என, மூத்த அமைச்சர் ராமலிங்கரெட்டி அறிவுரை கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இரண்டு ஆண்டுகளில் முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக சித்தராமையா, சிவகுமார் ஆதரவாளர்கள் அறிக்கை வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்தி உள்ளனர். இதனால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்க, கட்சி மேலிடம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வரும் 2028 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பினால் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். அமைதியை கடைப்பிடித்தால் 2028 முதல் 2033 வரை, காங்கிரஸ் ஆட்சி நீடிக்கும். பா.ஜ., - ம.ஜ.த., நிரந்தர எதிர்க்கட்சியாக இருக்கும்.
கடந்த தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்றோம். இதுபோன்ற சூழ்நிலையில் அதிகம் பேசாமல், மக்கள் பணியாற்றுவது நல்லது. எந்த பிரச்னையாக இருந்தாலும் பேச்சு மூலம் தீர்க்கப்பட வேண்டும். காங்கிரசில் பல பிரிவுகள் உள்ளன என்று, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு வீடு, பல வாசல்கள் உள்ளன. தங்கள் வீடு சரியாக உள்ளதா என்பதை, பா.ஜ.,வினர் பார்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.