/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தர்மஸ்தலாவுக்கு நாளை பவன் கல்யாண் வருகை தர்மஸ்தலாவுக்கு நாளை பவன் கல்யாண் வருகை
தர்மஸ்தலாவுக்கு நாளை பவன் கல்யாண் வருகை
தர்மஸ்தலாவுக்கு நாளை பவன் கல்யாண் வருகை
தர்மஸ்தலாவுக்கு நாளை பவன் கல்யாண் வருகை
ADDED : செப் 10, 2025 01:49 AM

மங்களூரு : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தர்மஸ்தலாவுக்கு நாளை வருகிறார்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து பா.ஜ., தொண்டர்கள், வாகனங்களில் தர்மஸ்தலா நோக்கி படையெடுத்து வந்து, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். காங்கிரஸ் தொண்டர்களும், தர்மஸ்தலா செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் மஞ்சுநாதா கோவிலுக்கு தன் ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், நாளை தர்மஸ்தலா வருகிறார். மாலை 5:00 மணிக்கு அவரது தலைமையில் கோவில் முன், ஆரத்தி சேவையும் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. பின், கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டேயை சந்தித்து அவர் பேசுகிறார்.
இதற்கிடையில் தர்மஸ்தலா வழக்கு குறித்த விசாரணையை துரிதப்படுத்தி உள்ள, எஸ்.ஐ.டி., அதிகாரிகள், கேரள யு - டியூபர் முனாப்பிடம் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தினர்.
இன்னொரு யு - டியூபர் அபிஷேக்கிடமும் நேற்று விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின், இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்பியவர்களுக்கு, வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததா என்பது பற்றி, அமலாக்கத்துறை ஒரு பக்கம் விசாரித்து வரும் நிலையில், இதுகுறித்து எஸ்.ஐ.டி., அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.
மைசூரில் உள்ள ஒடநாடி தொண்டு நிறுவனம் மூலம், தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பியவர்களுக்கு, பணம் விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அந்த தொண்டு நிறுவனத்திற்கு, கர்நாடக உளவு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகள் நடந்த, பணபரிமாற்ற ஆவணங்களை ஆய்வு செய்தனர்.