/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'வருவாய் நிலத்தில் வசிக்கும் 1 லட்சம் பேருக்கு பட்டா' 'வருவாய் நிலத்தில் வசிக்கும் 1 லட்சம் பேருக்கு பட்டா'
'வருவாய் நிலத்தில் வசிக்கும் 1 லட்சம் பேருக்கு பட்டா'
'வருவாய் நிலத்தில் வசிக்கும் 1 லட்சம் பேருக்கு பட்டா'
'வருவாய் நிலத்தில் வசிக்கும் 1 லட்சம் பேருக்கு பட்டா'
ADDED : மே 12, 2025 06:56 AM
ராம்நகர்: ''வருவாய் நிலத்தில் வசிக்கும் ஒரு லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
ராம்நகர் மாவட்டத்தில் நேற்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், துணை முதல்வரும், கர்நாடக காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் கலந்து கொண்டார்.
இதன்பின், அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதை முன்னிட்டு, வருவாய் நிலத்தில் வாழும் 1 லட்சம் பேருக்கு வரும் 20ம் தேதி, விஜயநகரில் பட்டா வழங்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கென பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. கட்சியை வளர்க்கும் ஒரு ஆய்வகமாக இளைஞர் காங்கிரஸ் திகழ்கிறது.
வரும் காலத்தில் இளைஞர்கள் தலைவராக விரும்பினால், அடிமட்டத்திலிருந்து உழைக்க வேண்டும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை விரைந்து முடிக்க வேண்டும். மற்றவர்களின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க கூடாது.
மாநிலம் முழுதும் 100 கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக, சென்னபட்டணாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து 500 கோடி ரூபாய் நன்கொடை வசூலிப்பர். கனகபுராவில் உள்ள எனது நிலம் விற்கப்பட்டு அதன் மூலம் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்படும்.
ராம்நகர் விரைவில் கிரேட்டர் பெங்களூருடன் இணைக்கப்படும். அப்போது, தான் இங்குள்ள நிலத்தின் மதிப்பு அதிகரிக்கும். முதலில் குமாரசாமி ஆதரவு அளித்தார். தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.