/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கூட்டணியால் நன்மைதான் நிகில் குமாரசாமி பெருமிதம் கூட்டணியால் நன்மைதான் நிகில் குமாரசாமி பெருமிதம்
கூட்டணியால் நன்மைதான் நிகில் குமாரசாமி பெருமிதம்
கூட்டணியால் நன்மைதான் நிகில் குமாரசாமி பெருமிதம்
கூட்டணியால் நன்மைதான் நிகில் குமாரசாமி பெருமிதம்
ADDED : ஜூன் 17, 2025 08:10 AM

துமகூரு : ''மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் ஒரு உடன்பாட்டை எட்டி உள்ளன. இதனால் இரு கட்சிகளுக்கும் நன்மை பயக்கும்,'' என, மாநில ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.
'மக்களுடன் ஜனதா தளம்' சுற்றுப்பயணத்தை துவங்குவதற்கு முன்பு, நேற்று துமகூரு சித்தலிங்க மடத்திற்கு நிகில் குமாரசாமி சென்றார்.
அங்குள்ள சிவகுமார சுவாமிகளின் பிருந்தாவனத்தை வணங்கினார். பின், மடாதிபதி சித்தலிங்க சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஹேமாவதி லிங்கன் கால்வாய் திட்ட பிரச்னையை, விவசாயிகளுடன் அமர்ந்து, விவாதித்து தீர்ப்பது பற்றி மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான சிவகுமார் யோசிக்கவில்லை. தண்ணீர் பிரச்னையில் அரசு, அரசியல் செய்யக் கூடாது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் ஒரு உடன்பாட்டை எட்டி உள்ளன. இதனால் இரு கட்சிகளுக்கும் நன்மை பயக்கும். சமீபத்திய லோக்சபா தேர்தல் முடிவுகளும் இதை நிரூபித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.