/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் ரமேஷுக்கு புது பொறுப்பு விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் ரமேஷுக்கு புது பொறுப்பு
விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் ரமேஷுக்கு புது பொறுப்பு
விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் ரமேஷுக்கு புது பொறுப்பு
விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் ரமேஷுக்கு புது பொறுப்பு
ADDED : ஜூன் 01, 2025 11:54 PM

பெங்களூரு : விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தலைவர் பையப்பனஹள்ளி ரமேஷுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு சாரா தொழிலாளர்களின் தென் மாநில ஒருங்கிணைப்பாளரும், விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவருமான பையப்பனஹள்ளி டி.ரமேஷ். இந்திய தேசிய கட்டட கட்டுமான வன மற்றும் மரத் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய செயலராகவும், தமிழகம், புதுச்சேரியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் ராமசந்திர குந்தியா அறிவித்து உள்ளார்.
ரமேஷ் கூறுகையில், ''ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கங்களுடன் இணைந்து பாடுபடுவேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்,'' என்றார்.