/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண் சிசுக்கள் அழிப்பு தடுக்க புதிய திட்டம் பெண் சிசுக்கள் அழிப்பு தடுக்க புதிய திட்டம்
பெண் சிசுக்கள் அழிப்பு தடுக்க புதிய திட்டம்
பெண் சிசுக்கள் அழிப்பு தடுக்க புதிய திட்டம்
பெண் சிசுக்கள் அழிப்பு தடுக்க புதிய திட்டம்
ADDED : செப் 09, 2025 04:55 AM
பெங்களூரு: பெண் சிசுக்கள், கருவிலேயே அழிக்கப்படுவதை தடுக்க, கர்நாடக அரசு, 'சேவ் மாம்' திட்டத்தை வகுத்துள்ளது. இதை செயல்படுத்த தயாராகிறது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநில அரசு எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், பெண் சிசுக்களை கருவிலேயே அழிப்பது, ஆங்காங்கே நடக்கிறது. இதை தடுக்க, 'சேவ் மாம்' என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் சிசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பெரும்பாலான கர்ப்பிணியரை பற்றிய தகவல்கள் கிடைப்பது இல்லை. அவர்கள் எங்கு சென்றனர், பிரசவம் நடந்ததா, தாய், சேயின் ஆரோக்கியம் குறித்த தகவல் தெரிவது இல்லை.
தாய் கார்டு பெற்றிருந்தும், முறையாக பரிசோதனைக்கு வருவது இல்லை. இதனால் அவர்களின் ஆரோக்கியம் குறித்து, தகவல் தெரிந்து கொள்ளும் நோக்கில், புதிய திட்டம் செயல்படுத்தப்படும். ஆந்திராவை போன்று, 'சேவ் மாம்' திட்டத்தை செயல்படுத்த, கர்நாடக அரசும் ஆலோசிக்கிறது.
இதற்காக 'சேவ் மாம்' திட்டத்தின் கீழ், செயலி தயாரிக்கப்படுகிறது. இதில் கர்ப்பிணியர் தாய் கார்டு வழங்கும் போதே, அவர்கள் பற்றிய முழு தகவல் சேகரிக்கப்படும்.
இந்த தகவல்களை செயலியில், ஆஷா ஊழியர்கள் பதிவேற்றம் செய்வர். மாதந்தோறும் அவர்கள் பரிசோதனைக்கு வருகிறார்களா என்பது தெரியும்.
ஒருவேளை வேறு மருத்துவமனைக்கு சென்றாலும், தெரிந்து கொள்வது எளிது. குழந்தை பிறந்து, இரண்டு வயது ஆகும் வரை, தாய், சேய் கண் காணிக்கப்படுவர்.
பெண் சிசுக்களை கருவிலேயே அழிப்பதை தடுக்க, இந்த திட்டம் உதவியாக இருக்கும். கர்ப்பிணியர் கண்காணிப்பில் இருப்பதால், சிசுக்களை அழிக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.