Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'நந்தினி' விலை குறைப்பு நாளை முதல் அமல்

'நந்தினி' விலை குறைப்பு நாளை முதல் அமல்

'நந்தினி' விலை குறைப்பு நாளை முதல் அமல்

'நந்தினி' விலை குறைப்பு நாளை முதல் அமல்

ADDED : செப் 20, 2025 11:04 PM


Google News
பெங்களூரு:'நந்தினி' பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. புதிய விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கே.எம்.எப்., எனும் கர்நாடகா பால் கூட்டமைப்பின் தயாரிப்பான நந்தினி பால் பொருட்கள் மாநிலத்தில் பிரபலமானவை. கர்நாடகாவை தாண்டி பல மாநிலங்களிலும் நந்தினியின் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன. இவற்றின் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் கவலைப்பட்டு வந்தனர்.

இதற்கிடையில், பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக இம்மாதம் முதல் வாரத்தில் குறைக்கப்பட்டது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், கே.எம்.எப்., நிர்வாக இயக்குநர் சிவசாமி நேற்று கூறுகையில், “நந்தினி பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் தயிர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. புதிய விலை நாளை முதல் அமலுக்கு வரும். இது நந்தினியின் தசரா பரிசு,” என்றார்.

நந்தினி பொருட்கள் பொருள் பழைய விலை புதிய விலை (ரூபாயில்) ஒரு லிட்டர் நெய் 650 610 அரை கிலோ வெண்ணெோய் 305 286 ஒரு கிலோ பன்னீர் 425 408 ஒரு கிலோ சீஸ் 480 450 ஐஸ்கிரீம் பேமலி பேக் 645 574







      Our Apps Available On




      Dinamalar

      Follow us