/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இறந்த குட்டியை இழுத்து சென்ற தாய் யானை இறந்த குட்டியை இழுத்து சென்ற தாய் யானை
இறந்த குட்டியை இழுத்து சென்ற தாய் யானை
இறந்த குட்டியை இழுத்து சென்ற தாய் யானை
இறந்த குட்டியை இழுத்து சென்ற தாய் யானை
ADDED : ஜூன் 17, 2025 08:06 AM

ஹாசன் : பிரசவத்தின்போது குட்டி இறந்தது தெரியாமல், உயிருடன் இருப்பதாக நினைத்து, மூன்று நாட்களாக தாய் யானை, அதை இழுத்துச் செல்லும் நெஞ்சை உருக்கும் சம்பவம், ஹாசனில் நடந்துள்ளது.
ஹாசனில் இரண்டு நாட்களுக்கு முன்பு, உணவு தேடி குட்டியுடன் வந்த யானை, அறுந்து விழுந்த மின்சார கம்பி மீது கால் வைத்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
இந்நிலையில், இம்மாதம் 14ம் தேதி பேலுாரின் ஆரோஹள்ளியில் சிராகுரா கிராமத்தில், ஜக்னள்ளி எஸ்டேட்டில், கருவுற்றிருந்த யானை, குட்டியை ஈன்றது. ஆனால் குட்டி இறந்தே பிறந்தது.
இதை அறியாத தாய் யானை, குட்டியை காலால் உதைத்து எழுப்ப முயற்சித்தது. கன மழைக்கு நடுவிலும் இறந்த குட்டியை இழுத்துக் கொண்டு சென்றதை, கிராமத்தினர் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
குட்டியை எழுப்பும் முயற்சியை கைவிடாத தாய் யானை, அதை இழுத்துச் சென்றது கண்ணீரை வரவழைத்தது.