ADDED : ஜூலை 03, 2025 11:02 PM
பீதர்: பீதர் நகரின், போடம்பள்ளி கிராமத்தின் அருகில், நேற்று முன் தினம் இரவு, வேகமாக சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த திறந்தவெளி கிணற்றுக்குள் விழுந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சரக்கு வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த ஏழு பேரை மீட்டனர்.
ஆனால் அதில் பயணம் செய்த, போடம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த் ஜோஷி என்ற காந்தராஜு, 45, ரவி, 18, ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற ஐவர் காயங்களுடன் தப்பினர்.
விபத்தில் லட்சுமிகாந்த் ஜோஷி உயிரிழந்த தகவலைக் கேட்டு அவரது தாய் சாரதா பாய்க்கு, 86, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், பலனின்றி அவர் உயிரிழந்தார்.