/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காஸ் சிலிண்டர் வெடித்து தாய், 3 பிள்ளைகள் காயம் காஸ் சிலிண்டர் வெடித்து தாய், 3 பிள்ளைகள் காயம்
காஸ் சிலிண்டர் வெடித்து தாய், 3 பிள்ளைகள் காயம்
காஸ் சிலிண்டர் வெடித்து தாய், 3 பிள்ளைகள் காயம்
காஸ் சிலிண்டர் வெடித்து தாய், 3 பிள்ளைகள் காயம்
ADDED : மே 12, 2025 06:50 AM
சிக்கபல்லாபூர்: வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்ததில், தாயும், மூன்று பிள்ளைகளும் காயமடைந்தனர். தாய், மகனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சிக்கபல்லாபூர் நகரின், புறநகர் பகுதியில் கரியபள்ளியின், வெங்கடேஸ்வரா பள்ளி அருகில் வசிப்பவர் லட்சுமிதேவி, 32. நேற்று காலையில், இவரது வீட்டில் காஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து சிதறியது. வீட்டின் மேற்கூரை சிமென்ட் ஷீட் பறந்தது.
தீப்பிடித்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து கருகின. இச்சம்பவத்தில் லட்சுமி தேவி, 32, இவரது மகன்கள் ஹர்ஷவர்தன், 14, சஞ்சய், 13, மகள் ஹரிப்ரியா, 11, பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த சிக்கபல்லாபூர் ஊரக போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தினர்.
காயமடைந்தவர்களை, சிந்தாமணி பொது மருத்துவமனையில் சேர்த்தனர். லட்சுமி தேவி மற்றும் மகன் ஹர்ஷவர்த்தன் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், கூடுதல் சிகிச்சைக்காக பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சிக்கபல்லாபூர் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது. சமையல் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருந்ததை கவனிக்காமல் ஸ்டவ் பற்ற வைத்ததால், தீ விபத்து நிகழ்ந்து உள்ளது.