sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மோடி பெங்களூரு வருகை; போக்குவரத்து மாற்றம்

 மோடி பெங்களூரு வருகை; போக்குவரத்து மாற்றம்

 மோடி பெங்களூரு வருகை; போக்குவரத்து மாற்றம்


ADDED : மே 10, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 12:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நடக்கும் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, இன்று பெங்களூருக்கு வருகை தருகிறார். இதை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:

பெங்களூருக்கு இன்று, பிரதமர் நரேந்திர மோடி, வருகை தருகிறார். காலை ஹெச்.ஏ.எல்., அருகில் மாநில பா.ஜ., ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழாவில், பிரதமர் பங்கேற்பார்.

அதன் பின், ஆர்ட் ஆப் லிவிங் பவுண்டேஷனின், 45வது ஆண்டு விழா மற்றும் ரவி சங்கர் குருஜியின், 70வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.

பிரதமரின் வருகை காரணமாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமுகமான போக்குவரத்துக்காக, ஹெச்.ஏ.எல்., சுற்றுப்பகுதிகளில், இன்று அதிகாலை 5:00 முதல் மதியம் 3:00 மணி வரை, வாகன போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பழைய விமான நிலைய சாலையில், எஸ்.டி., சாலை ஜங்ஷனில் இருந்து, டிரினிட்டி ஜங்ஷன் வரை,

ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தின், அம்ப்ரெலா ஜங்ஷனில் இருந்து, கேட் 30 வரை வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு வருவோரின் வாகனங்களை, ஹெச்.ஏ.எல்., டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் பார்க்கிங், எஸ்.டி., சாலை ஜங்ஷன், பழைய விமான நிலைய சாலை, விஸ்வேஸ்வரய்யா கல்லுாரி மைதானம், முருகேஷ் பாளையா, ஹெச்.ஏ.எல்., பஸ் யார்டு, பி.என்.பி., வங்கி அருகில், சுரஞ்சன் தாஸ் சாலையில் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

காலை, 9:00 மணி முதல், மதியம், 3:00 மணி வரை, நைஸ் சாலையில் செல்லும் அனைத்து வி தமான வாகனங்களின் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன பயணியருக்கு மாற்று பாதை வசதி செய்யப்ப ட்டுள்ளது.

துமகூரு சாலையில் இருந்து, நைஸ் சாலை வழியாக, கனகபுரா சாலைக்கு செல்லும் வாகன ஓட்டுநர்கள், சி.எம்.டி.ஐ., ஜங்ஷன் அருகில் வலது புறம் திரும்பி, ராஜ்குமார் புண்யபூமி சாலை வழியாக செல்லலாம்.

துமகூரு சாலையில், நகரின் உட்புறத்தில் இருந்து, நைஸ் சாலை வழியாக கனகபுரா சாலைக்கு செல்லும் வாகன ஓட்டுநர்கள், சி.எம்.டி..ஐ., ஜங்ஷனில் இடது புறம் திரும்பி, ராஜ்குமார் புண்யபூமி சாலை வழியாக செல்ல வேண்டும்.

மாகடி சாலையில் இருந்து, நைஸ் சாலை வழியாக கனகபுரா சாலைக்கு செல்லும் வாகன ஓட்டுநர்கள், சுமனஹள்ளி ஜங்ஷன் அருகில் வலது புறம் திரும்பி, முன்னோக்கி செல்லலாம்.

மைசூரு சாலை வழியாக வந்து, கனகபுரா சாலைக்கு செல்லும் வாகனங்கள், நாயண்டஹள்ளி ஜங்ஷன் அருகில் வலது புறம் திரும்பி, கனகபுரா சாலைக்கு செல்லலாம்,

துமகூரு சாலையில் இருந்து, நைஸ் சாலை வழியாக கனகபுரா சாலைக்கு செல்லும் வாகனங்கள், சி.எம்.டி.ஐ., ஜங்ஷன் அருகில், வலது புறம் திரும்பி ராஜ்குமார் புண்யபூமி சாலை வழியாக செல்லலாம்.

மைசூரு சாலையில் இருந்து, பன்னரகட்டா சாலைக்கு செல்லும் வாகனங்கள் கெங்கேரி விஷ்ணுவர்தன் சாலை வழியாக, உத்தரஹள்ளி, வசந்தபுரா கிராஸ் வழியாக, கனகபுரா சாலையை அடைந்து, கோனனகுன்டே கிராசில் இடது புறம் திரும்பி, ஹரிநகர் கிராஸ் ஜம்பு சவாரி தின்னே வழியாக, பன்னரகட்டா சாலையை நோக்கி செல்லலாம்.

பெங்களூரில் இருந்து, கனகபுராவுக்கு செல்லும் வாகனங்கள், கோனனகுன்டே கிராசில் வலது புறம் திரும்பி, வசந்தபுரா உத்தரஹள்ளி வழியாக, அகரா ஜங்ஷனில் இடது புறம் திரும்பி, அகரா, பஞ்சாரபாளையா, உத்தரி கிராமம் மூலமாக சென்று, கக்கலிபுராவில், வலது புறம் திரும்பி கனகபுராவுக்கு செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us