/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல் மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்
மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்
மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்
மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்
ADDED : ஜூன் 06, 2025 06:14 AM
பெங்களூரு: ''மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டிரோன் பயிற்சி அளிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது,'' என, மாநில கிராம வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தொழிற்திறனை மேம்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளது. ட்ரோன் பைலட்டிங், பழுது நீக்குவது, நிர்வகிப்பது குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
முதற்கட்டமாக கலபுரகியில் 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதுகுறித்து, பெங்களூரின் ட்ரோன் நிறுவனமான 'நியோஸ்கை' நிறுவன குழுவினருடன், ஆலோசனை நடத்தப்பட்டது.
தேசிய அளவில் 70,000க்கும் மேற்பட்ட ட்ரோன் பைலட்டுகள் தேவைப்படுகின்றனர். எனவே மாணவர்களுக்கு, பயிற்சியளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கண்காணிப்பு பணிகள், விவசாயம், ஆய்வு உட்பட பல்வேறு பணிகளுக்கு ட்ரோன் பயன்படுத்த இளைஞர்கள் தயாராக்கப்படுகின்றனர்.
இப்பயிற்சி முடிந்த பின், வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். கலபுரகியில் திறமையான 'ட்ரோன் படை' அமைப்பது, எங்களின் குறிக்கோளாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.