Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நடத்துநரை தாக்கியவருக்கு ரூ.6,000 அபராதம், '3 ஆண்டு'

நடத்துநரை தாக்கியவருக்கு ரூ.6,000 அபராதம், '3 ஆண்டு'

நடத்துநரை தாக்கியவருக்கு ரூ.6,000 அபராதம், '3 ஆண்டு'

நடத்துநரை தாக்கியவருக்கு ரூ.6,000 அபராதம், '3 ஆண்டு'

ADDED : செப் 07, 2025 10:54 PM


Google News
பல்லாரி : கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நடத்துநரை தாக்கி, பணியில் குறுக்கிட்டவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பல்லாரி ஹகரிபொம்மனஹள்ளி கே.எஸ்.ஆர்.டி.சி., டிப்போவில் நடத்துநராக பணியாற்றுபவர் ஹுலுகப்பா. இவர் ஹொஸ்பேட் - மரியம்மனஹள்ளி வழித்தடத்தில் பணியாற்றுகிறார்.

கடந்த 2022, ஜூலை 24ம் தேதி மாலை 4:00 மணியளவில் ஹொஸ்பேட் பஸ் நிலையத்தில் பயணியரை ஏற்றி கொண்டு, மரியம்மனஹள்ளிக்கு பஸ் புறப்பட்டது. ஹொஸ்பேட்டின் ராமா டாக்கீஸ் அருகில் உள்ள நிறுத்தத்தில், பஸ்சை நிறுத்தி பயணியரை இறக்கி, ஏற்றி கொண்டனர்.

அப்போது பஸ்சில் ஏறிய ஒரு பயணியிடம், நடத்துநர் ஹுலுகப்பா, 'உன்னிடம் டிக்கெட்டுக்கு பணம் உள்ளதா. இதற்கு முன் பஸ்சில் பயணித்து, டிக்கெட் வாங்காமல் தொந்தரவு கொடுத்தாய்' என கேட்டார். இவ்வேளையில் பஸ்சில் இருந்த பரசுராமப்பா என்பவர் தலையிட்டு, நடத்துநரிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டினார்.

நடத்துநர் ஹுலுகப்பாவை, பஸ்சில் இருந்து வெளியே இழுத்து வந்து, அவரது மூக்கில் ஓங்கி குத்தினார். இது தொடர்பாக, ஹொஸ்பேட் போலீஸ் நிலையத்தில், புகார் செய்யப்பட்டது. பரசுராமப்பாவை கைது செய்து, ஹொஸ்பேட் ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணையில் குற்றம் உறுதியானதால், பரசுராமப்பாவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பிரசாந்த் நாகலாபுரா, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அபராத தொகையை, பாதிக்கப்பட்ட நடத்துநருக்கு வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us