/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்களை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் பரப்பியவர் கைது பெண்களை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் பரப்பியவர் கைது
பெண்களை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் பரப்பியவர் கைது
பெண்களை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் பரப்பியவர் கைது
பெண்களை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் பரப்பியவர் கைது
ADDED : மே 11, 2025 11:23 PM

பானஸ்வாடி: முந்தைய நிறுவனங்களில் தன்னுடன் பணியாற்றிய பெண்களின் படங்களை, ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.
குடகு மாவட்டம், மடிகேரியை சேர்ந்தவர் ஆசிஷ் மோனப்பா, 30. பெங்களூரு ஜக்கூரில் வாடகை வீட்டில் தங்கி பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி, குழந்தை மடிகேரியில் வசித்து வருகின்றனர்.
பெங்களூரில் 2023 டிசம்பரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இவர், 2025 ஜனவரியில் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அப்போது தன்னுடன் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியரிடம், வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கான விண்ணப்பங்கள் அனுப்ப, அவரின் லேப்டாப் வாங்கி சென்றார்.
ஏப்ரல் மாதத்தில் அப்பெண் ஊழியரிடம் லேப்டாப்பை ஒப்படைத்தார். வீட்டிற்கு சென்ற அப்பெண், தன் அலுவலக பணிக்கு பயன்படுத்தி கொண்டிருந்தார். கடந்த 3ம் தேதி தன் லேப்டாப்பில், 'போல்டர்' ஒன்றரை திறந்தபோது, அதில் தன் படங்கள் மட்டுமின்றி, தன் அலுவலகத்தில் பணியாற்றும் சில பெண்களின் படங்கள், ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக, படங்கள் இருந்த பெண் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஆசிஷை கையும் களவுமாக பிடிக்க திட்டம் வகுத்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன், அவரை குறிப்பிட்ட இடத்துக்கு லேப்டாப் வழங்கிய பெண் வரச் சொன்னார். அங்கு, ஆசிஷ் ஆபாசமாக சித்தரித்த பெண்கள் மறைவாக நின்றிருந்தனர். இது குறித்து அவரிடம் கேட்டபோது, அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஓடும் அவசரத்தில், மொபைல் போனை விட்டு சென்று விட்டார்.
போனை திறந்து, ஆசிஷின் டெலிகிராமை பார்த்தபோது, தங்கள் அனைவரின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, பானஸ்வாடி போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். இந்த படங்களை வேறு யாருக்காவது அனுப்பினாரா என்பது குறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.