Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தந்தையிடம் சண்டை போட்டவரை காரை ஏற்றி கொன்றவர் கைது

தந்தையிடம் சண்டை போட்டவரை காரை ஏற்றி கொன்றவர் கைது

தந்தையிடம் சண்டை போட்டவரை காரை ஏற்றி கொன்றவர் கைது

தந்தையிடம் சண்டை போட்டவரை காரை ஏற்றி கொன்றவர் கைது

ADDED : செப் 12, 2025 06:55 AM


Google News
துமகூரு: கிராம பஞ்சாயத்து பில் கலெக்டர் மற்றும் நபர் இடையே ஏற்பட்ட மோதல், ஒருவரின் கொலையில் முடிந்தது.

துமகூரு மாவட்டம், மதுகிரி தாலுகாவின், முத்தேனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, போலேனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ஆனந்த், 55. இதே கிராம பஞ்சாயத்தில் பில் கலெக்டராக பணியாற்றுபவர் ராமகிருஷ்ணா, 50. நேற்று முன்தினம் காலை, குடிநீர் கட்டணம் வசூலிக்க வந்த ராமகிருஷ்ணாவிடம், குழாயில் தண்ணீர் வரவில்லை என, ஆனந்த் புகார் கூறினார்.

இதே காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது ராமகிருஷ்ணா, ஆனந்தை திட்டியதாக கூறப்படுகிறது. மதியம் ராமகிருஷ்ணாவின் வீட்டுக்கு சென்று, அவரது மனைவி நாகமணியிடம், 'உங்கள் கணவர், என்னை திட்டினார்' என ஆனந்த் புகார் கூறினார்.

அப்போது அங்கு வந்த ராமகிருஷ்ணாவின் மகன் நாகேஷ், 25, பொலீரோ வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து, ஆனந்த் மீது மோதினார்.இதில்பலத்த காயமடைந்த ஆனந்த், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொடிகேனஹள்ளி போலீசார், நாகேஷை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us