/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருமணத்திற்கு முன்பே பிரசவம்; சிசுவை கொன்ற காதலர்கள் கைது திருமணத்திற்கு முன்பே பிரசவம்; சிசுவை கொன்ற காதலர்கள் கைது
திருமணத்திற்கு முன்பே பிரசவம்; சிசுவை கொன்ற காதலர்கள் கைது
திருமணத்திற்கு முன்பே பிரசவம்; சிசுவை கொன்ற காதலர்கள் கைது
திருமணத்திற்கு முன்பே பிரசவம்; சிசுவை கொன்ற காதலர்கள் கைது
ADDED : மார் 25, 2025 12:21 AM

பெலகாவி : திருமணத்திற்கு முன்பே பிரசவித்ததால், பெண் சிசுவை கொலை செய்த காதலர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெலகாவி மாவட்டம், கித்துார் தாலுகாவின், அம்படகட்டி கிராமத்தில் வசிப்பவர் மஹாபலேஷ் ருத்ரப்பா காமோஜி, 31. இவரும் இதே பகுதியில் வசிக்கும் சிம்ரன் மவுலாசாப் மாணிகபாயி, 22, என்பவரும் மூன்று ஆண்டுகளாக பரஸ்பரம் காதலிக்கின்றனர்.
இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் உடல் ரீதியான தொடர்பும் இருந்தது. இதனால் சிம்ரன் கருவுற்றார். இதை வீட்டுக்கு தெரியாமல் மூடி மறைத்தார்.
உடல் இயல்பாகவே பருமனாக இருந்ததால், இவர் கர்ப்பிணி என்பது வீட்டினருக்கு தெரியவில்லை. ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த நிலையில், 5ம் தேதி, பிரசவ வலி ஏற்பட்டது.
சுயமாக பிரசவம் பார்த்துக் கொள்வது எப்படி என்பதை, யு டியூபில் பார்த்து தெரிந்து கொண்டார். வீட்டின் குளியலறைக்கு சென்று, சிம்ரன் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டார்.
அவரது காதலரும் வீடியோ கால் வழியாக, ஆலோசனை கூறினார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை அழாமல் இருக்க, வாயை துணியால் கட்டி, பெட்டியில் போட்டார். இதனால் சிசு இறந்தது. அதன்பின் யாரும் பார்க்காத நேரத்தில், வீட்டின் பின்புறம் உள்ள குப்பைத் தொட்டியில் வீசினார்.
அதன்பின் அரசு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்றுக் கொண்டார். இதற்கிடையே குப்பையில் கிடந்த சிசுவின் உடலை, நாய்கள் வெளியே இழுத்துக் குதறின. இதைக் கண்ட அப்பகுதியினர், அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த கித்துார் போலீசார், சிசுவின் உடலை மீட்டு விசாரணையை துவக்கினர். அக்கம், பக்கத்து அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற பெண்கள் குறித்து போலீசார் தகவல் சேகரித்தனர்.
அப்போது சிம்ரன் சிகிச்சை பெற்றது தெரிந்தது. அவரது வீட்டு பின்புறம் உள்ள குப்பைத் தொட்டியில், சிசு உடல் கிடந்ததால் சந்தேகத்தின் பேரில், அவரை விசாரித்தபோது, உண்மையை ஒப்புக்கொண்டார். நடந்ததை விவரித்தார்.
அதன்பின் சிம்ரனையும், அவரது காதலர் மஹாபலேஷ் காமோஜியையும், நேற்று கைது செய்து, நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர்.
காதலர்கள் கைதான பின்னரே, இவர்களின் செயல் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.