/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளி உடலை ரகசியமாக புதைத்த லைன்மேன் மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளி உடலை ரகசியமாக புதைத்த லைன்மேன்
மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளி உடலை ரகசியமாக புதைத்த லைன்மேன்
மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளி உடலை ரகசியமாக புதைத்த லைன்மேன்
மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளி உடலை ரகசியமாக புதைத்த லைன்மேன்
ADDED : செப் 11, 2025 11:34 PM
சிக்கபல்லாபூர்: மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை, ரகசியமாக புதைத்த லைன்மேன் கைது செய்யப்பட்டார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், குடிபன்டே தாலுகாவின், பீச்சகானஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ரவி, 33. இவர் மின்சாரம் தொடர்பான, கூலி வேலை செய்து வந்தார். இதே கிராமத்தை சேர்ந்த சந்திரகுமார், 35, லைன்மேனாக பணியாற்றுகிறார். இவர் அவ்வப்போது, ரவியை தன்னுடன் பணிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
கடந்த 8ம் தேதியன்று, மேடிமாகலஹள்ளி கிராசில், கோழிப்பண்ணை அருகில் உள்ள மின் கம்பத்தை சரி செய்வதற்காக, இருவரும் சென்றிருந்தனர். எந்தவித பாதுகாப்பு சாதனமும் இன்றி, மின் கம்பத்தில் ரவி ஏறினார். அப்போது, மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். பீதியடைந்த சந்திரகுமார், ரவியின் உடலை யாருக்கும் தெரியாமல், அங்கிருந்த ஏரி வளாகத்தில் புதைத்தார்.
பணிக்கு சென்ற ரவி, மீண்டும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடத்துவங்கினர். அவரை பற்றி எந்த தகவலும் தெரியாத காரணத்தால், குடிபன்டே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியபோது, ரவியை சந்திரகுமார் அழைத்துச் சென்றது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, ரவி மின்சாரம் பாய்ந்து இறந்ததை ஒப்புக்கொண்டார். அவரை நேற்று கைது செய்தனர்.
ரவியின் உடலை புதைத்த இடத்தில், உடலை தோண்டி எடுக்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.