Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உடல்நிலை குறித்த வதந்தி குமாரசாமி முற்றுப்புள்ளி

உடல்நிலை குறித்த வதந்தி குமாரசாமி முற்றுப்புள்ளி

உடல்நிலை குறித்த வதந்தி குமாரசாமி முற்றுப்புள்ளி

உடல்நிலை குறித்த வதந்தி குமாரசாமி முற்றுப்புள்ளி

ADDED : செப் 03, 2025 09:54 AM


Google News
Latest Tamil News
சமூக வலைதளங்களில் ம.ஜ.த., மாநில தலைவரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சருமான குமாரசாமி உடல் மெலிந்து காணப்படுவது போல, நடக்க முடியாமல் செல்வது போல பல வீடியோக்கள் வெளியாகின. இதை வைத்து, பலரும் தங்கள் இஷ்டத்திற்கு பேச துவங்கினர்.

குமாரசாமி மோசமான உடல் நிலையுடன் இருப்பதாகவும் 'யு - டியூப்' வீடியோக்களில் வதந்திகள் பரவின. இது ம.ஜ.த., தொண்டர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது.

தொண்டர்கள் வருத்தமடைவதை புரிந்து கொண்ட நிகில் சமீபத்தில் கூறுகையில், 'என் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. ஆனால், தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். தேசத்திற்காக பல நற்பணிகளை செய்ய காத்து கொண்டிருக்கிறார்' என்றார்.

இருப்பினும், குமாரசாமிக்கு இருக்கும் இதயம் தொடர்பான பிரச்னைகளுடன் முடித்துப் போட்டு, அவரது மெலிந்த உடல் தோற்றத்தை வைத்தும் அவர் வரும் நவம்பரில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநில அரசியலுக்கு திரும்புவார் எனவும் வதந்திகள் பரவின.

இந்நிலையில் தன் உடல் நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியதாவது:

நான் நலமாக இருக்கிறேன். என்னை பற்றி கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. புதுடில்லியில் உள்ள என் அலுவலகத்தில் வழக்கமான வேலைகளை செய்து வருகிறேன். மருத்துவரின் அறிவுறுத்தலின்படியே பணிகளை செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தி, ம.ஜ.த., தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us