/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'நுாலகத்தில் கிடைக்கும் அறிவு தான் முக்கியம்' தமிழ் ஐ.ஏ.எஸ்., ராம் பிரசாத் மனோகர் அட்வைஸ் 'நுாலகத்தில் கிடைக்கும் அறிவு தான் முக்கியம்' தமிழ் ஐ.ஏ.எஸ்., ராம் பிரசாத் மனோகர் அட்வைஸ்
'நுாலகத்தில் கிடைக்கும் அறிவு தான் முக்கியம்' தமிழ் ஐ.ஏ.எஸ்., ராம் பிரசாத் மனோகர் அட்வைஸ்
'நுாலகத்தில் கிடைக்கும் அறிவு தான் முக்கியம்' தமிழ் ஐ.ஏ.எஸ்., ராம் பிரசாத் மனோகர் அட்வைஸ்
'நுாலகத்தில் கிடைக்கும் அறிவு தான் முக்கியம்' தமிழ் ஐ.ஏ.எஸ்., ராம் பிரசாத் மனோகர் அட்வைஸ்
ADDED : செப் 12, 2025 06:52 AM

சிவாஜிநகர்: ''நுாலகத்தின் அளவு முக்கியம் அல்ல; அங்கு கிடைக்கும் அறிவு தான் முக்கியம்,'' என, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவருமான ராம் பிரசாத் மனோகர் பேசினார்.
கர்நாடக தமிழர்கள் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய தினச்சுடர் பா.சு.மணி பிறந்தநாளையொட்டி கர்நாடக தமிழர் நாள் விழா, சிவாஜி நகர் குயின்ஸ் சாலையில் உள்ள இன்ஸ்டிடியூஷன் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ் முதல் தளத்தில் நேற்று கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடந்தது.
தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவருமான ராம் பிரசாத் மனோகர் பேசியதாவது:
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்திலும் முன்னேற வேண்டும். நுாலகத்தின் அளவு முக்கியம் அல்ல; அங்கு கிடைக்கும் அறிவு தான் முக்கியம்.
கோவில்கள் ஆயிரம் கோவில்களை கட்டுவதை விட ஒரு நுாலகத்தை கட்டலாம். சமூக வலைதளங்களில் கிடைக்கும் தகவலுக்கு பஞ்சமில்லை. இருப்பினும், கையில் புத்தகத்தை எடுத்து படித்தால் மட்டுமே நிறைய தெரிந்து கொள்ள முடியும்.
படிப்பு மட்டும் தான் அனைவரையும் முன்னேற்றும். தமிழர்கள் அனைவரும் அரசு, தனியார் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரியும், கர்நாடக கூடுதல் டி.ஜி.பி.,யுமான முருகன் பேசியது:
பெங்களூரில் தமிழர்களுக்காக அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்க பா.சு.மணி பாடுபட்டார். பெங்களூரில் நடக்கும் தமிழ் புத்தக விழாவில் வருவோரை பார்க்கும்போது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களின் தமிழ் ஆர்வத்தை பார்த்து ஆனந்தம் அடைவேன்.
தமிழை படிப்பதற்காக பல மைல் துாரத்திலிருந்து பலரும் வருவதை பார்ப்பது மனதிற்கு நிறைவாக இருக்கும். கடினமான வேலைகளை செய்யும்போது, பெரியவர்களிடமிருந்து அறிவுரைகளை கேட்டுப் பெற வேண்டும். அதுவே சால சிறந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி 'ஐ.ஏ.எஸ்., ஆக ஆசைப்படு' எனும் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ராம்பிரசாத் மனோகர் கலந்துரையாடினார். 'வாராது வந்த மாமணி' என்ற தலைப்பில் சிறப்பு பாட்டரங்கம் நடந்தது.
இதில், தேவி ராஜேஷ், மா.வித்யா, செ.நந்தினி, வி.அனுசியா, ஜுவேரியா தஹ்சின், பேராசிரியர் தீபா, சு.சரண்யா ஆகியோர் பங்கேற்றனர்.
ஸ்ரீராமபுரம் லிட்டில் பிளவர் பள்ளி செயலர் அ.மதுசூதனபாபு, ஓய்வு பெற்ற சுங்கத்துறை கூடுதல் இயக்குநர் மணிவாசகம், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் ஆகியோர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள கர்நாடக பத்திரிகையாளர் சங்க கட்டடத்தில் புதிதாக நுாலகம், இலவச அரசு சேவைகள் வழங்கல் மையம் திறந்து வைக்கப்பட்டன.