Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முதல்வரின் தடுப்பூசி கருத்து கிரண் மஜும்தார் கண்டனம்

முதல்வரின் தடுப்பூசி கருத்து கிரண் மஜும்தார் கண்டனம்

முதல்வரின் தடுப்பூசி கருத்து கிரண் மஜும்தார் கண்டனம்

முதல்வரின் தடுப்பூசி கருத்து கிரண் மஜும்தார் கண்டனம்

ADDED : ஜூலை 04, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: கொரோனா தடுப்பூசி குறித்த முதல்வர் சித்தராமையாவின் கருத்துக்கு பிரபல மருந்து நிறுவனத்தின் நிறுவனர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஹாசன் மாவட்டத்தில், சமீப காலமாக இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து உள்ளது. இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என முதல்வர் சித்தராமையா சமீபத்தில் கூறினார்.

இது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கும் சம்பந்தம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையாவின் கொரோனா தடுப்பூசி குறித்த கருத்துக்கு, பிரபல தொழிலதிபரும், பயோகான் மருந்து நிறுவனத்தின் நிறுவனருமான கிரண் மஜும்தார் ஷா கண்டனம் தெரிவித்து தன் 'எக்ஸ்' பக்கத்தில் நேற்று பதிவிட்டு உள்ளார்.

'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டின் கீழ், உலகளாவிய சோதனைகளுக்கு பின் அனுமதிக்கப்பட்டன.

'தடுப்பூசிகளுக்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கப்பட்டது என்பது பச்சை பொய். தடுப்பூசிகள் குறித்து மக்களுக்கு தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

'இவை கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளது. சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம். குறைகூறுவதற்கு பதிலாக அறிவியல் ரீதியான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்' என குறிப்பிட்டு உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us