Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி கேரள கோவில் அர்ச்சகர் அதிரடி கைது

பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி கேரள கோவில் அர்ச்சகர் அதிரடி கைது

பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி கேரள கோவில் அர்ச்சகர் அதிரடி கைது

பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி கேரள கோவில் அர்ச்சகர் அதிரடி கைது

ADDED : ஜூன் 17, 2025 08:11 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு,: குடும்ப பிரச்னைக்கு தீர்வு தேடி கோவிலுக்கு வந்த பெண்ணை, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, பலாத்காரம் செய்ய முயற்சித்த கேரள கோவில் அர்ச்சகரை, பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரின், பெல்லந்துாரில் 35 வயது பெண் வசிக்கிறார். கணவர் இறந்து விட்டதால், தன் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார். குடும்பத்தில் பல பிரச்னைகளால் அவதிப்பட்டார்.

இவருக்கு தெரிந்த சிலர், 'கேரளாவின் பெரிங்கோட்டிகாராவில் உள்ள பிரபலமான கோவிலுக்கு சென்று வழிபட்டால், குடும்ப பிரச்னைகள் தீரும்' என, ஆலோசனை கூறினர்.

இதன்படி, சமீபத்தில் அந்த கோவிலுக்கு அப்பெண் சென்றார். அப்பெண்ணுக்கு தமிழும், கன்னடம் மட்டுமே தெரியும். அங்கிருந்த அர்ச்சகர்கள் அருண், 50, உன்னி தாமோதரன், 48, ஆகியோரிடம் பூஜைகள் பற்றி விபரம் கேட்டார். அர்ச்சகர் அருண், தமிழில் பேசி பூஜைக்கு உதவுவதாக கூறி, பிரச்னைகளை தெரிந்து கொண்டார்.

அர்ச்சகர்கள், 'உங்களுக்கு யாரோ செய்வினை, மாந்த்ரீகம் செய்துள்ளனர். அதை எடுக்க 24,000 ரூபாய் செலவாகும்' என்றனர். பெண்ணும் சம்மதித்தார். அருண், அப்பெண்ணின் மொபைல் போன் எண்ணை வாங்கியுள்ளார்.

பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு தினமும் நள்ளிரவில் வீடியோ கால் செய்த அருண், 'உங்களுக்கு வைக்கப்பட்ட செய்வினையை எடுக்க, நீங்கள் நிர்வாணமாக வேண்டும்' என்றார். அப்பெண் சம்மதிக்கவில்லை. அர்ச்சகர், 'நான் கூறியபடி செய்யாவிட்டால், உங்கள் பிள்ளைகளை செய்வினை தாக்கும்' என, மிரட்டியுள்ளார்.

பீதியடைந்த பெண், அர்ச்சகர் கூறியபடி செய்தார். அதை வீடியோவாக பதிவு செய்து கொண்ட அருண், 'நான் அழைக்கும்போது, கேரளாவுக்கு வர வேண்டும். இல்லா விட்டால் வீடியோவை வெளியிடுவேன்' என, மிரட்டியுள்ளார்.

அவரது தொந்தரவு தாங்க முடியாமல், சில நாட்களுக்கு முன் அப்பெண் கேரளாவுக்கு சென்றார். அப்போது அருணும், மற்றொரு அர்ச்சகர் உன்னி தாமோதரனும், அப்பெண்ணை வைத்து ஏதோ பூஜை நடத்தினர். அதன்பின், காரில் அவரை பலவந்தமாக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அவர் எதிர்த்து போராடி தப்பினார்.

பெங்களூரு திரும்பிய பெண், பெல்லந்துார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கேரளாவுக்கு சென்று அர்ச்சகர் அருணை, நேற்று காலை கைது செய்தனர். மற்றொரு அர்ச்சகர் உன்னி தாமோதரன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us