/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஈகோவை ஒதுக்கி வையுங்கள்: கலெக்டர்களுக்கு முதல்வர் 'கிளாஸ்' ஈகோவை ஒதுக்கி வையுங்கள்: கலெக்டர்களுக்கு முதல்வர் 'கிளாஸ்'
ஈகோவை ஒதுக்கி வையுங்கள்: கலெக்டர்களுக்கு முதல்வர் 'கிளாஸ்'
ஈகோவை ஒதுக்கி வையுங்கள்: கலெக்டர்களுக்கு முதல்வர் 'கிளாஸ்'
ஈகோவை ஒதுக்கி வையுங்கள்: கலெக்டர்களுக்கு முதல்வர் 'கிளாஸ்'
ADDED : மே 30, 2025 11:31 PM

பெங்களூரு: ''ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, மாநிலத்தின் விரிவான வளர்ச்சி சாத்தியமாகும்,'' என, கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்களுக்கு, முதல்வர் சித்தராமையா, 'கிளாஸ்' எடுத்துள்ளார்.
பெங்களூரு விதான் சவுதாவில் மாவட்ட கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்களுடன், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.
அவர் பேசியதாவது:
அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் சக்திகளை வளரவிட, நீங்கள் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. அத்தகைய சக்திகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியுங்கள். மக்களுக்கு விரோதமாக செயல்படுவோர் மீதும் நடவடிக்கை எடுங்கள்.
நேரடி பொறுப்பு
தங்கள் ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே மாநிலத்தில் விரிவான வளர்ச்சி சாத்தியமாகும். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தால், மாநிலத்தில் வளர்ச்சி நடக்காது. இரண்டும் நேரடி தொடர்புடையவை. மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தால் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் நேரடி பொறுப்பு.
மக்களின் வரிப்பணத்தில் தான் நீங்களும், நாங்களும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகிறோம் என்பதை மறக்கக் கூடாது.
குழந்தை திருமணம் அதிகரிப்பது பற்றி மாவட்ட கலெக்டர்கள் கவனத்திற்கு தகவல் வருவது இல்லையா? உங்கள் கீழ் பணி செய்வோர் உங்களுக்கு தகவல் தருவது கிடையாதா?
கீழ்மட்டத்தில் பணி செய்வோர் உங்களிடம் சொல்லவில்லை என்றால், நீங்கள் திறமையானவர் இல்லை என்று அர்த்தம்.
குழந்தை திருமணம்
இந்த ஆண்டு 700 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதை தடுக்க சட்டங்களும், விதிமுறைகளும் உள்ளன.
பொதுமக்களுக்கு சுகாதாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்றால் அது நிர்வாக தோல்வி தான். கிராமங்களில் ஏன் இன்னும் அடிப்படை வசதிகளை வழங்க முடியவில்லை. சில மாவட்ட கலெக்டர்கள், பொதுமக்கள் புகாருக்கு உரிய பதில் அளிப்பது என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
மாவட்ட பொறுப்பு செயலர்கள், மாதத்திற்கு இரண்டு முறையாவது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். தலைமை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வருத்தம் அளிக்கிறது
மாநிலத்தில் 10,931 ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதுவரை 6,065 ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு உள்ளது. ஏரி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் முறையாக செயல்படாத கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
இந்த ஆண்டு மாநிலத்தில் 1,395 போக்சோ வழக்குப் பதிவாகி உள்ளது. இந்த வழக்குகளில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் வேண்டும். நிலுவையில் உள்ள வருவாய் கிராமங்களை அறிவிக்கும் பணியை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.மாநிலத்தில் 186 இந்திரா கேன்டீன்களில் 103ல் கட்டுமான பணிகள் முடிந்துள்ளது.
தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பி.பி.எல்., ரேஷன் அட்டைகளை ரத்து செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் வீட்டுவசதி, வருவாய் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனையும் வழங்கினார்.
துணை முதல்வர் சிவகுமார், தலைமை செயலர் ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.