/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எம்.எல்.ஏ.,க்கள் சொத்து மதிப்பு கர்நாடகாவுக்கு தான் முதலிடம் எம்.எல்.ஏ.,க்கள் சொத்து மதிப்பு கர்நாடகாவுக்கு தான் முதலிடம்
எம்.எல்.ஏ.,க்கள் சொத்து மதிப்பு கர்நாடகாவுக்கு தான் முதலிடம்
எம்.எல்.ஏ.,க்கள் சொத்து மதிப்பு கர்நாடகாவுக்கு தான் முதலிடம்
எம்.எல்.ஏ.,க்கள் சொத்து மதிப்பு கர்நாடகாவுக்கு தான் முதலிடம்
ADDED : மார் 22, 2025 06:26 AM

பெங்களூரு : ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு குறித்து, ஆய்வு செய்து, 'டாப் 10 குபேரர்கள்' பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் கர்நாடகாவின் நான்கு பேர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ராம்நகர், கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.,வும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார், 1,413 கோடி ரூபாய் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
சிக்கபல்லாபூர், கவுரி பிதனுார் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., புட்டசாமி கவுடா, 1,267 கோடி ரூபாய் சொத்துகளுடன், மூன்றாம் இடத்தில் உள்ளார்.
பெங்களூரு கோவிந்த்ராஜ் நகர் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., பிரியா கிருஷ்ணா, 1,156 கோடி ரூபாய் சொத்துகளுடன் நான்காம் இடத்திலும்; ஹெப்பால் காங்., - எம்.எல்.ஏ., பைரதி சுரேஷ் 648 கோடி ரூபாய் சொத்துகளுடன் 10ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
கர்நாடகாவின் 223 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து மதிப்பு 14,179 கோடி ரூபாயாகும். நாட்டில் எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து மதிப்பு பட்டியலில், கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் வைத்துள்ள எம்.எல்.ஏ.,க்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதும் கர்நாடகாவில் தான்.
மாநிலத்தின் 31 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். மிக அதிகமான கடன் வைத்துள்ள 'டாப் 10' எம்.எல்.ஏ.,க்களில், கர்நாடகாவின் மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.
பிரியா கிருஷ்ணா 881 கோடி ரூபாய், சிவகுமார் 245 கோடி ரூபாய், பைரதி சுரேஷ் 114 கோடி ரூபாய் கடனாளியாக உள்ளதாகவும் ஏ.டி.ஆர்., அறிக்கை விவரித்துள்ளது.