/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பன்னரகட்டா உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு 'ஜில்' உணவு பன்னரகட்டா உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு 'ஜில்' உணவு
பன்னரகட்டா உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு 'ஜில்' உணவு
பன்னரகட்டா உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு 'ஜில்' உணவு
பன்னரகட்டா உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு 'ஜில்' உணவு
ADDED : மே 22, 2025 11:19 PM

பெங்களூரு: பன்னர்கட்டா உயிரியல் பூங்கா பகுதியில் வெயிலால் அவதிப்படும் விலங்குகளுக்கு ஐஸ் கட்டிக்குள் வைக்கப்பட்ட பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பெங்களூரில் மூன்று நாட்களாக பெய்த மழை, அக்னி நட்சத்திரத்தில் இருந்து நம்மை காத்துள்ளது. அதேவேளையில், ஆனேகல்லில் உள்ள பன்னர கட்டா உயிரியல் பூங்கா பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது.
இதனால் பூங்காவில் உள்ள விலங்குகள் நலனை கருத்தில் கொண்டு, பூங்கா நிர்வாகிகள், ஐஸ் கட்டிக்குள் வைக்கப்பட்ட பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குரங்கிற்கு குச்சி ஐஸ்; யானை, கரடிக்கு தர்பூசணி; முள்ளம் பன்றிக்கு நுங்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. புலிகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டில், தேங்கிய நீரில் தங்களை குளிர்வித்து கொள்கின்றன.
விலங்குகள் சாப்பிடுவதை பார்த்த சுற்றுலா பயணியர் கூறுகையில், 'வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளுக்கு ஐஸ் கட்டிக்குள் வைக்கப்பட்ட பழங்கள் வழங்குவது பாராட்டத்தக்கது. குளிர்ச்சியான உணவை விலங்குகள் சாப்பிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.