/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 2 ஆண்டுகளில் ரூ.6.57 லட்சம் கோடி முதலீடு தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல் 2 ஆண்டுகளில் ரூ.6.57 லட்சம் கோடி முதலீடு தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல்
2 ஆண்டுகளில் ரூ.6.57 லட்சம் கோடி முதலீடு தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல்
2 ஆண்டுகளில் ரூ.6.57 லட்சம் கோடி முதலீடு தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல்
2 ஆண்டுகளில் ரூ.6.57 லட்சம் கோடி முதலீடு தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல்
ADDED : ஜூன் 13, 2025 11:23 PM

பெங்களூரு: கர்நாடகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 6.57 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளதாக, மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.
கர்நாடக அரசின் தொழில் துறையின் 2 ஆண்டு சாதனையை வெளிப்படுத்தும் வகையில், 'அடுத்த பாய்ச்சலை இயக்குதல்' என்ற தலைப்பில் புத்தகத்தை, அமைச்சர் எம்.பி.பாட்டீல் விதான் சவுதாவில் நேற்று வெளியிட்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளில் என் துறை சார்பில் 115 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 771 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 6 லட்சத்து 57 ஆயிரத்து 660 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன. 'புதிய தொழில் கொள்கை 2025' அமல்படுத்தி உள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவது இதன் நோக்கம்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில், நமது நாட்டிலேயே கர்நாடகா 2வது இடத்தில் உள்ளது. பெங்களூரு மட்டுமின்றி பின்தங்கிய மாவட்டங்கள், தாலுகாக்களிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்ய நிறைய சலுகைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.
தொட்டபல்லாபூர் - தாபஸ்பேட் இடையில் 40,000 கோடி ரூபாயில் அறிவு, புதுமை, நிலைத்தன்மை சார்ந்த நகரம் உருவாகிறது. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஆதரிக்க பெங்களூருக்கு அருகில் 1,000 ஏக்கரில் 'ஸ்விப்ட் சிட்டி' என்ற பெயரில் நகரம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.