/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ஆர்.சி.பி.,யை வாங்க நான் பைத்தியம் இல்லை' 'ஆர்.சி.பி.,யை வாங்க நான் பைத்தியம் இல்லை'
'ஆர்.சி.பி.,யை வாங்க நான் பைத்தியம் இல்லை'
'ஆர்.சி.பி.,யை வாங்க நான் பைத்தியம் இல்லை'
'ஆர்.சி.பி.,யை வாங்க நான் பைத்தியம் இல்லை'
ADDED : ஜூன் 11, 2025 11:40 PM

'ஆர்.சி.பி., அணியை விலை கொடுத்து வாங்குவதற்கு, நான் பைத்தியம் இல்லை,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இம்மாதம் 3ம் தேதி நடந்த, ஐ.பி.எல்., இறுதி போட்டியில் வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் ஒரு நாள் கூட மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கடந்த 4ம் தேதி சின்னசாமி மைதானம் முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ஆர்.சி.பி., ரசிகர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஆர்.சி.பி., அணியை அதன் உரிமையாளர் 17,000 கோடி ரூபாய்க்கு வேறு யாருக்காவது விற்க முயற்சிப்பதாக, நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
ஆனால் அது உண்மை இல்லை என்று ஆர்.சி.பி., தெளிவுபடுத்தியது. இதற்கிடையில் ஆர்.சி.பி., அணியை வாங்க, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆர்வம் காட்டுவதாகவும் பேச்சு அடிபட்டது.
இதுகுறித்து சிவகுமார் டில்லியில் நேற்று அளித்த பேட்டியில், ''ஆர்.சி.பி., அணி இயக்குனர்கள் குழுவில் இடம்பெற எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அதற்கு எனக்கு நேரமில்லை.
''நீண்ட காலமாக கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். அவ்வளவு தான். நான் ஏன் ஆர்.சி.பி., அணியை வாங்க வேண்டும். நான் பைத்தியம் இல்லை. ராயல் சேலஞ்ச் மதுபானத்தை கூட குடித்தது இல்லை,'' என்றார்
- நமது நிருபர் -.