ADDED : மே 11, 2026 02:35 AM
பெங்களூரு: பெங்களூரில், 11,217 சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக, பெங்., குடிநீர், வடிகால் வாரியம் தெரிவித்து உள்ளது.
வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியத்தின் 'நீல படை' அணியினர், நகர் முழுதும் சோதனை செய்தனர். 54,625 குடியிருப்புகளில் சோதனை நடந்தன. இதில், 11,217 சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டன.
அவை உடனடியாக துண்டிக்கப்பட்டன. சட்ட விரோதமாக குடிநீர் இணைப்புகளை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த குடிநீர் இணைப்புகளை துண்டித்ததன் மூலம், 100 கோடி லிட்டர் நீர் பாதுகாக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் தவிர்க்கப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் 5 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. சட்ட விரோத குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதற்காக, 18 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.





