Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது

 சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது

 சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது


ADDED : மார் 08, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தட்சிண கன்னடா: சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டதால், ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வால் தாலுகாவில் உள்ளது விட்டல் முட்னுார் கிராமம். இந்த கிராமத்தில் சிலர், அரசிடம் எந்த உரிமமும் பெறாமல், தங்கள் வீட்டில் பட்டாசு தயாரித்து வருகின்றனர். 201ல் இக்கிராமத்தில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த அப்துல் கபூர், 35, சட்டவிரோதமாக பட்டாசு ஆலை நடத்தி வந்தார். அதாவது, தன் வீட்டின் அருகே இருக்கும் வனப்பகுதியில் பட்டாசு தயாரித்து வந்தார். நேற்று பட்டாசு தயாரிக்கும் போது, எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. உடன் யாரும் வேலை பார்க்காததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதையறிந்த, விட்டல் போலீசார், அப்துல் கபூர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us