/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ஹனிடிராப்' விவகாரம்: அரசியல் கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முயற்சி 'ஹனிடிராப்' விவகாரம்: அரசியல் கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முயற்சி
'ஹனிடிராப்' விவகாரம்: அரசியல் கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முயற்சி
'ஹனிடிராப்' விவகாரம்: அரசியல் கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முயற்சி
'ஹனிடிராப்' விவகாரம்: அரசியல் கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முயற்சி
ADDED : மார் 26, 2025 05:22 AM
கர்நாடகாவில் 'ஹனிடிராப்' விவகாரம், தேசிய அளவில் பேசப்படுகிறது. இவ்விஷயத்தில் அமைச்சர் ராஜண்ணா புகார் அளிக்க தாமதம் செய்வதால், இதுதொடர்பாக, கட்சி மேலிடத்தை சந்திக்க, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் திட்டமிட்டுள்ளனர்.
சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் ராஜண்ணா, 'கர்நாடகாவில் 48 எம்.எல்.ஏ.,க்களை ஹனிடிராப் செய்ய முயற்சி நடந்துள்ளது. இந்த 'நெட்ஒர்க்', நாடு முழுதும் பரவி உள்ளது. பல மத்திய அமைச்சர்கள், இதில் சிக்கி உள்ளனர். என்னையும் இதில் சிக்க வைக்க முயற்சித்தனர்' என்று கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக சட்டசபையில் போராட்டம் நடத்திய 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'ஹனி டிராப் விவகாரத்தில் துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்பு உள்ளது' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா குற்றஞ்சாட்டினார். இதை மறுத்த சிவகுமார், 'எந்த காரணமும் இல்லாமல் ஒருவரை ஹனிடிராப் செய்ய முடியாது' என்றார்.
இந்த சர்ச்சைகளால் நொந்நு நுாடுல்ஸ் ஆன காங்கிரஸ் மேலிடம், ஹனிடிராப் தொடர்பாக புகார் எதுவும் கொடுக்க வேண்டாம். அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இவ்விஷயம் தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை சந்தித்து விவரிக்கும்படி, தனக்கு ஆதரவான பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை முதல்வர் சித்தராமையா அனுப்பி உள்ளார்.
அவரும் கடந்த சில நாட்களாக புதுடில்லியில் தங்கி உள்ளார். விரைவில் மேலும் சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அவருடன் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
***
- நமது நிருபர் -