Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மழைக்கு பயந்து வீட்டை காலி செய்யும் வாடகைதாரர்கள் சாய் லே - அவுட்டில் வீட்டு உரிமையாளர்கள் வருத்தம்

மழைக்கு பயந்து வீட்டை காலி செய்யும் வாடகைதாரர்கள் சாய் லே - அவுட்டில் வீட்டு உரிமையாளர்கள் வருத்தம்

மழைக்கு பயந்து வீட்டை காலி செய்யும் வாடகைதாரர்கள் சாய் லே - அவுட்டில் வீட்டு உரிமையாளர்கள் வருத்தம்

மழைக்கு பயந்து வீட்டை காலி செய்யும் வாடகைதாரர்கள் சாய் லே - அவுட்டில் வீட்டு உரிமையாளர்கள் வருத்தம்

ADDED : மே 24, 2025 11:04 PM


Google News
சாய் லே - அவுட்: மழையால் தத்தளித்த சாய் லே - அவுட், தற்போது இயல்பு நிலைக்கு திரும்புகிறது. வீடுகள் சேதமடைந்துள்ளதால், வாடகைதாரர்கள் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு செல்கின்றனர். இதனால் உரிமையாளர்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

ஆண்டு தோறும் மழைக்காலத்தில், பெங்களூரின், ஹொரமாவு சாய் லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்து தொந்தரவை ஏற்படுத்துகிறது. கடந்தாண்டும் இது போன்ற பிரச்னை ஏற்பட்டது.

குடியிருப்புகளை வாரக்கணக்கில் வெள்ளம் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் முடியவில்லை. இயல்பு நிலைக்கு திரும்ப பல நாட்களானது.

கழிவுநீர் கலப்பு


பெங்களூரில் சில நாட்களாக, கோடை மழை பெய்ததில், சாய் லே - அவுட் மீண்டும் வெள்ளத்தில் சிக்கியது. தொடர்ந்து மூன்று, நான்கு நாட்கள் மழைநீர் சூழ்ந்திருந்தது. வீட்டின் கீழ் தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கழிவுநீர் கலந்தது. வீடுகளுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது.

தற்போது மழை நின்றதால், வெள்ளம் வடிகிறது. இப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்புகிறது. ஆனால் வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் பழுதடைந்துள்ளன. இவற்றை சரி செய்ய ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.

பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் தொட்டியில் கழிவுநீர் கலந்ததால், அதை முற்றிலும் காலியாக்கி, சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு தொட்டியை சுத்தம் செய்ய 500 ரூபாய் செலவானது. ஆனால் இப்போது 1,000 முதல் 2,000 ரூபாய் வரை செலவாகிறது.

சில வீடுகளில் மோட்டாரும், குழாய்களும் பழுதடைந்துள்ளன. இவற்றை சரி செய்ய அதிகம் செலவிட வேண்டும். வீடுகளில் இருந்த குளிர்ச்சாதன பெட்டி, டி.வி., வாஷிங் மெஷின் உட்பட, விலை மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்கள் பாழாகியுள்ளன. இவற்றை மாற்ற வேண்டியுள்ளது. வாகனங்கள் ஓட்டும் நிலையில் இல்லை.

மாடிகளில் வசிப்போர்


சாய் லே - அவுட்டில், குடிநீர் பிரச்னை உள்ளதால், குடிநீர் வாரியம் டேங்கர்களில் கொண்டு சென்று சப்ளை செய்கிறது. ஆனால் இது பலருக்கும் பயன்படவில்லை. டேங்கர் வரும்போது பொது மக்கள் குடங்கள், பக்கெட்களை கொண்டு சென்று பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இரண்டாவது, மூன்றாவது மாடியில் வசிப்போர், வயதானவர்கள், பலவீனமானவர்களால் தண்ணீர் சுமந்து செல்வது கஷ்டம்.

கோடையில் ஒன்றிரண்டு நாட்கள் பெய்த கன மழைக்கே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் வருகிறது. இதே பிரச்னை ஏற்படும் என்ற அச்சத்தில், வாடகைதாரர்கள் வீட்டை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்கின்றனர், வங்கிகளில் கடன் வாங்கி, வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ள உரிமையாளர்கள், நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

சாய் லே - அவுட்டில், தண்ணீர் தேங்கி இருந்ததால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பெங்களூரு மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக டாக்டர்கள் குழுவை, அங்கு அனுப்பியுள்ளது. அவர்கள் மக்களை பரிசோதித்து, சிகிச்சை அளித்து மருந்து கொடுக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us