/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாட்டிறைச்சி ஏற்றி வந்த லாரி ஹிந்து அமைப்பினர் எரிப்பு மாட்டிறைச்சி ஏற்றி வந்த லாரி ஹிந்து அமைப்பினர் எரிப்பு
மாட்டிறைச்சி ஏற்றி வந்த லாரி ஹிந்து அமைப்பினர் எரிப்பு
மாட்டிறைச்சி ஏற்றி வந்த லாரி ஹிந்து அமைப்பினர் எரிப்பு
மாட்டிறைச்சி ஏற்றி வந்த லாரி ஹிந்து அமைப்பினர் எரிப்பு
ADDED : செப் 24, 2025 05:37 AM

பெலகாவி: சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை ஏற்றி வந்த லாரியை ஹிந்து அமைப்பினர் எரித்தனர்.
பெலகாவி மாவட்டம், காக்வாட் தாலுகா ஐனாபூரை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்களுக்கு நேற்று முன்தினம், சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது .
ராய்பாக் தாலுகா, குடச்சியிலிருந்து லாரிகள் மூலமாக தெலுங்கானாவிற்கு மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, ஹிந்து அமைப்பினர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு லாரிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, காக்வாட் தாலுகாவில் உள்ள சித்தேஸ்வரா கோவில் அருகே வந்த லாரியை சோதனை செய்தனர்.
லாரியில் பல கிலோ மாட்டிறைச்சி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வர தாமதமானது.
இதனால் ஆத்திரமடைந்த ஹிந்து அமைப்பினர், லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பின், லாரிக்கு தீ வைத்தனர்.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காக்வாட் போலீசார் கூறுகையில், 'ஹிந்து அமைப்பினர் வைத்த தீயில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. சட்டவிரோதமாக மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற மூன்று பேரை கைது செய்துள்ளோம்.
'௦லாரிக்கு தீ வைத்தவர்கள் குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.