/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவில் வழக்குகளை தீர்க்க குற்றவியல் சட்டம் எச்சரிக்கை தேவை என ஐகோர்ட் நீதிபதி கருத்து சிவில் வழக்குகளை தீர்க்க குற்றவியல் சட்டம் எச்சரிக்கை தேவை என ஐகோர்ட் நீதிபதி கருத்து
சிவில் வழக்குகளை தீர்க்க குற்றவியல் சட்டம் எச்சரிக்கை தேவை என ஐகோர்ட் நீதிபதி கருத்து
சிவில் வழக்குகளை தீர்க்க குற்றவியல் சட்டம் எச்சரிக்கை தேவை என ஐகோர்ட் நீதிபதி கருத்து
சிவில் வழக்குகளை தீர்க்க குற்றவியல் சட்டம் எச்சரிக்கை தேவை என ஐகோர்ட் நீதிபதி கருத்து
ADDED : ஜூன் 05, 2025 11:35 PM
பெங்களூரு: ''சிவில் வழக்குகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவரிடம், நீதிமன்றங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்தார்.
பெங்களூரை சேர்ந்தவர் சோமசேகர், விலாஸ் போர்மெல்ஜி ஓஸ்வாவுடன் இணைந்து, 2011 முதல் 'கிரீன் லேண்ட் இன்ட்ரா' என்ற ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். 2016ல் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் தனித்தனியாக தொழிலை துவக்கினர்.
புகார்
எஸ்.டி., பிரிவை சேர்ந்த சோமசேகர், 2021ல் டி.சி.ஆர்.இ., எனும் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தில் புகார் அளித்தார். அதில், 'விலாஸ் போர்மெல்ஜி ஓஸ்வா, 2020ல் தன்னை ஜாதி அடிப்படையில் அவமதித்தார்' என்று குற்றம்சாட்டியிருந்தார்.
புகார் பதிவு செய்த டி.சி.ஆர்.இ., மூன்று ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. அதன் பின், புகார்தாரர் சோமசேகர், 2024ல் இரு சாட்சிகளுடன் சேர்ந்து வாக்குமூலம் கொடுத்தார்.
இதையடுத்து, டி.சி.ஆர்.இ., அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், ஓஸ்வா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதை உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், விலாஸ் போர்மெல்ஜி ஓஸ்வா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
துஷ்பிரயோகம்
தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
மனுதாரர் ஓஸ்வா, புகார்தாரர் சோமசேகரிடம், விளையாட்டு மைதானத்தில், ஜாதி மனப்பான்மையை காட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார். இது, ஜாதி துஷ்பிரயோகம் செய்ததாக கூற முடியாது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட நிதி தகராறு காரணமாக, பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டது தெரிகிறது. புகார்தாரருக்கு ஆதரவாக சாட்சி அளித்தவர்கள், சம்பவ தினத்தன்று அங்கு இருந்தனர் என்பதற்கான ஆதாரம் இல்லை. புகார் அளித்த பின்னரே, அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.
இவ்வழக்கின் விசாரணையை தொடர்வது சட்ட அமைப்பை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம். எனவே, ஓஸ்வா மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
சிவில் வழக்குகளை தீர்க்க, 'குற்றவியல் சட்டத்'தை பயன்படுத்துவோரிடம், நீதிமன்றங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.