ADDED : மே 03, 2026 11:37 PM
அ நிறம் | அளவு
ஷிவமொக்கா: ஷிவமொக்கா எஸ்.பி., பிரசாத் பெனகா, நேற்று அளித்த பேட்டி:
ஷிவமொக்கா மாவட்டம், சாகராவில் மே 1ம் தேதியன்று, 'நோ பார்க்கிங்' பகுதியில் ஒரு கார் நின்றிருந்தது. இதற்காக அபராதம் விதிக்க வேண்டியிருந்தது.
ஐ.டி.எம்.எஸ்., தொழில்நுட்பத்தில் போக்குவரத்து விதிமீறலை பதிவு செய்யும் போது, ஊழியர் கவனக்குறைவாக நோ பார்க்கிங் பகுதியில் கார் நின்றது என, பதிவு செய்வதற்கு பதிலாக, ஹெல்மெட் அணியவில்லை என, பதிவு செய்துவிட்டார்.
இந்த தவறு கவனத்துக்கு வந்ததும், போக்குவரத்து போலீசார், பழைய செலானை ரத்து செய்து விட்டு, நோ பார்க்கிங் தொடர்பான செலான் கொடுத்தனர்.
பொது மக்கள் குழப்பங்கள் இருந்தால், நேரடியாக போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
