Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'கிரஹலட்சுமி' பணத்தால் துாய்மை கொப்பால் பெண்ணுக்கு நன்றி

'கிரஹலட்சுமி' பணத்தால் துாய்மை கொப்பால் பெண்ணுக்கு நன்றி

'கிரஹலட்சுமி' பணத்தால் துாய்மை கொப்பால் பெண்ணுக்கு நன்றி

'கிரஹலட்சுமி' பணத்தால் துாய்மை கொப்பால் பெண்ணுக்கு நன்றி

ADDED : ஜூன் 04, 2025 11:24 PM


Google News
கொப்பால்: அரசின் 'கிரஹலட்சுமி' திட்டத்தின் உதவித்தொகையை, பெண்ணொருவர் பொது நோக்கத்துக்காக பயன்படுத்தி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களில், 'கிரஹ லட்சுமி' திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த தொகையை பெண்கள், தங்களின் குடும்ப தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

இதற்கிடையே பெண்ணொருவர், கிரஹலட்சுமி பணத்தை சேகரித்து வைத்து, கிராமத்தின் சாலையை சீரமைத்துள்ளார்.

கொப்பால் மாவட்டம், எலபுர்கா தாலுகாவின், யரேஹஞ்சிநாளா கிராமத்தில் வசிப்பவர் சவிதா நாகரெட்டி, 36. இவருக்கும் கிரஹ லட்சுமி திட்டத்தின் நிதி கிடைக்கிறது. இதை அவர் சேமித்து வைத்திருந்தார். இந்த பணத்தை நற்பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.

யரேஹஞ்சிநாளாவில் இருந்து, கோடமசகி கிராமத்துக்கு இணைப்பு ஏற்படுத்தும் பாதை மிகவும் மோசமாக இருந்தது. சாலையின் இரண்டு ஓரங்களிலும், முட்புதர் மண்டிக் கிடந்தது. முட்புதரை அகற்றி சாலையை சீரமைக்கும்படி, கிராம பஞ்சாயத்திடம் பல முறை வேண்டுகோள் விடுத்தும் பயன் இல்லை.

எனவே சவிதா நாகரெட்டி, தான் சேமித்து வைத்திருந்த 'கிரஹ லட்சுமி' பணத்தை பயன்படுத்தி, சாலையை சீரமைத்தார்.

பொக்லைனை வரவழைத்து, சாலையின் இரண்டு ஓரங்களிலும் மண்டிக்கிடந்த முட்புதரை அகற்றி, மக்களின் நடமாட்டத்துக்கு வழி ஏற்படுத்தினார். இவருக்கு கிராமத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us