Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பொது இடங்களில் குப்பை ஜி.பி.ஏ., அதிகாரிகள் எச்சரிக்கை

பொது இடங்களில் குப்பை ஜி.பி.ஏ., அதிகாரிகள் எச்சரிக்கை

பொது இடங்களில் குப்பை ஜி.பி.ஏ., அதிகாரிகள் எச்சரிக்கை

பொது இடங்களில் குப்பை ஜி.பி.ஏ., அதிகாரிகள் எச்சரிக்கை

ADDED : செப் 14, 2025 04:32 AM


Google News
பெங்களூரு: பொது இடங்களில், குப்பையை வீசியெறிவது தொடர்பாக அதிக புகார்கள் வருவதாக ஜி.பி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரில் பிளாக் ஸ்பாட்டுகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்ட, கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதால், நகரின் சுற்றுச்சூழல் பாழாகிறது. சாலைகள், பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு, அபராதம் விதிக்க ஜி.பி.ஏ., திட்டமிட்டுள்ளது.

பொது இடங்களில், குப்பை கொட்டுவோரை மார்ஷல்கள் கண்காணிப்பர். சாலைகளில் யாராவது குப்பை கொட்டினால், அவர்களிடம் அபராதம் வசூலிப்பர்.

முதன் முறையாக 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால், 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

குப்பை பிரச்னை தொடர்பாகவே, அதிகமான புகார்கள் வருகின்றன. பொது இடங்களில் குப்பை கொட்ட கூடாது. வீடுகளில் ஈரக்குப்பை மற்றும் உலர்ந்த குப்பை தரம் பிரித்து, குப்பை வாகனங்களில் போட வேண்டும். நடப்பாண்டு ஆகஸ்டில் பெங்களூரில் 1,483 பிளாக் ஸ்பாட்டுகள் குறித்து, புகார் வந்தன. இவற்றில் 1,464 பிளாக் ஸ்பாட்டுகள் சுத்தம் செய்யப்பட்டன.

இம்மாதம் இதுவரை 515 புகார் வந்தது. 423 இடங்களில், சுத்தம் செய்யப்பட்டன. மற்ற இடங்கள் சுத்தம் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us