/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள் மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள் மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை
அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள் மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை
அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள் மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை
அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள் மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை
ADDED : ஜூன் 12, 2025 07:59 AM

பெங்களூரு: ''படித்த இளைஞர்களால் தான், நாட்டை வலிமையானதாக மாற்ற முடியும். நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், உங்கள் அர்ப்பணிப்பு, முயற்சி, நாட்டை முன்னேற்றமடைய செய்யும்,'' என கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.
பெங்களூரு நகர பல்கலைக்கழகத்தின் நான்காவது பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:
'நீங்கள் துாக்கத்தில் காண்பது கனவுகள் அல்ல. கனவுகள் உங்களை துாங்க விடாது' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். அந்த கனவுகளை அடையவும், அர்த்தமுள்ள வாழ்க்கையை வடிவமைக்கவும் கல்வி மிகவும் மதிப்புமிக்க கருவி.
கல்வி வேலை வாய்ப்புக்கான ஒரு வழி மட்டுமல்ல; ஒழுக்கம், இரக்கம், சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. 'இளைஞர் சக்தி ஒரு பலமான, தன்னம்பிக்கை கொண்ட தேசத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது' என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
உலகிற்கு பூஜ்யம் மற்றும் தசம முறையை அறிமுகப்படுத்தியது இந்தியர்கள் தான். நமது பாரம்பரியம், அறிவின் கலங்கரை விளக்கமாகும். நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள தேசிய கல்வி கொள்கை, பிராந்திய மொழிகளை கற்பிக்கும் ஊடகமாக பயன்படுகிறது.
மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களை தேசிய தொலைநோக்கு பார்வையுடன் இணைத்து, 2047க்குள், நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற நீங்கள் பங்களிக்க வேண்டும்.
படித்த இளைஞர்களால் தான், நாட்டை வலிமையானதாக மாற்ற முடியும். நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், உங்கள் அர்ப்பணிப்பு, முயற்சி, நாட்டை முன்னேற்றமடைய செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு நகர பல்கலைக்கழக நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதக்கம் வழங்கினார்.