ADDED : ஜூன் 14, 2025 11:02 PM

தங்கவயல்: பார்வையற்ற முன்னாள் தபால் துறை அதிகாரி எம்.எஸ்.ஞானானந்தம் எழுதிய 'கோல்டன் விங்ஸ்' எனும் ஆங்கில நுால் வெளியீட்டு விழா நேற்று ராபர்ட்சன் பேட்டையில் நடந்தது.
விழாவுக்கு பேராசிரியர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். முதல் பிரதியை வேளாங்கண்ணி பால்ராஜ் பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர்கள் சேலம் ரகு, தங்கவயல் கணேஷ், இலுஷன் புத்தகப் பண்ணை சந்திரசேகர், கருணா மூர்த்தி, தங்கவயல் தமிழ்ச் சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி, நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை தலைவர் கோவலன், பெமல் தமிழ் மன்ற தலைவர் ரமேஷ், உலகத் தமிழ்க்கழக பத்தியநாதன், வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நுால் பற்றி உரையாற்றினர்.
திருநாவுக்கரசு குழுவின் பரதநாட்டியமும் நடந்தது. வீரமா முனிவர் கலைக்குழு தலைவர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.
விழாவில் பெமல் அன்பழகன், தபால் தந்தி துறையின் ஜானகிராமன், மனோகர், தேவன்பு, தமிழ்ச் சங்க திருமுருகன், முன்னாள் ராணுவ வீரர்கள் முருகன், கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.