Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராகு காலத்தில் பூஜை நடக்கும் பனசங்கரி அம்மன்

ராகு காலத்தில் பூஜை நடக்கும் பனசங்கரி அம்மன்

ராகு காலத்தில் பூஜை நடக்கும் பனசங்கரி அம்மன்

ராகு காலத்தில் பூஜை நடக்கும் பனசங்கரி அம்மன்

ADDED : செப் 01, 2025 10:09 PM


Google News
Latest Tamil News
ராகு காலத்தில் திருமணம், புதிய தொழில் துவங்குவது உள்ளிட்ட சுப காரியங்களை செய்யாமல் தவிர்ப்பது நல்லது என்று கூறுவர். ராகு காலத்தில் சுப காரியங்களை துவங்கினால் அந்த சுப காரியம் நல்லபடியாக இருக்காது என்றும் சொல்வர்.

ஆனால், கடவுள் வழிபாட்டிற்கும், ராகு, கேது தொடர்பான கிரக தோஷங்களை நீக்குவதற்கும் ராகு காலத்தில் பூஜை செய்வது உகந்த நேரமாக கருதப்படுகிறது. ராகு காலத்தில் அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்த பலன்களை தருவதுடன், எதிரிகளின் தொல்லையும் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

பெங்களூரு கனகபுரா சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற பனசங்கரி அம்மன் கோவிலில் தினமும் ராகு காலத்தில் தான் பூஜைகள் நடக்கின்றன.

கனவில் அம்மன் கடந்த 1915ம் ஆண்டு பனசங்கரி அம்மன் கோவில், சோமன ஷெட்டி என்பவரால் துவங்கப்பட்டது. பாகல்கோட்டின் பாதாமியில் இருந்து கோவில் சிலை கொண்டு வரப்பட்டது. பெங்களூரில் வசித்த சோமன ஷெட்டி ஒவ்வொரு ஆண்டும் தனது குடும்பத்தினருடன் பாதாமி சென்று, பனசங்கரி அம்மனை வழிபட்டு வருவது வழக்கம். ஒருமுறை உடல் நலக்குறைவால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை.

அம்மன் அவரது கனவில் தோன்றி, பாதாமியில் இருந்து தனது சிலையை எடுத்து வந்து இங்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறினார். அதன்படி அமைந்தது தான் இந்த கோவில்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் எலுமிச்சை தோலில் செய்யப்பட்ட விளக்கை ஏற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த வகையிலான வழிபாட்டின் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்ரபாத பவுர்ணமி நாளில் அம்மனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

கிணற்று தண்ணீர் கோவில் வளாகத்திற்குள் உள்ள ஸ்ரீ வரப்பிரசாத ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயரின் சிலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்டு இருப்பதும் இங்கு சிறப்பம்சமாக உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள கிணற்று தண்ணீர் தான் அம்மனுக்கு அபிஷேகம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

கோவிலின் நடை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயிலில் செல்வோர் பனசங்கரி ரயில் நிலையத்தில் இறங்கி கோவிலுக்கு செல்லலாம்.

-- -நமது நிருபர் --





      Our Apps Available On




      Dinamalar

      Follow us