ADDED : செப் 10, 2025 01:25 AM
ராஜாஜி நகர், செப். 10-
பெங்களூரு, ராஜாஜி நகரின் காயத்ரி நகரை சேர்ந்தவர் லதா, 28. தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இதே மருத்துவமனையில் எலக்ட்ரிஷியனாக மாண்டியாவை சேர்ந்த ரஞ்சித் பணியாற்றி வருகிறார். இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனாலும், லதா திருமணம் குறித்து பேசும் போதெல்லாம், ரஞ்சித் தள்ளிவைத்துக் கொண்டே இருந்தார். இதுபோன்று நேற்று முன்தினம் இரவும் இருவருக்குள் திருமணம் தொடர்பாக சண்டை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை மகள் அறையில் இருந்து வெளியே வராததால், பெற்றோர் பல முறை கதவை தட்டியும் திறக்கவில்லை. அச்சமடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, லதா துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.