/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நான்கு புலி குட்டிகளை வனத்துறையினர் பிடித்தனர் நான்கு புலி குட்டிகளை வனத்துறையினர் பிடித்தனர்
நான்கு புலி குட்டிகளை வனத்துறையினர் பிடித்தனர்
நான்கு புலி குட்டிகளை வனத்துறையினர் பிடித்தனர்
நான்கு புலி குட்டிகளை வனத்துறையினர் பிடித்தனர்
ADDED : டிச 01, 2025 06:29 AM
மைசூரு: மைசூரில் வயலில் தாயின்றி சுற்றித்திரிந்த நான்கு புலி குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்து சென்றனர்.
மைசூரு மாவட்டத்தின் வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் புலிகள் சுற்றித்திரிகின்றன. புலிகள் தாக்கியதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
சில நாட்களுக்கு முன் நாகரஹொளே பாதுகாக்கப்பட்ட புலிகள் வனப்பகுதிக்கு அருகே உள்ள கவுனடகட்டே கிராமத்தில் சுற்றித்திரிந்த பெண் புலியை வனத்துறை அதிகாரிகள், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
இந்த புலியின், குட்டிகள் வயல் பகுதியில் சுற்றித்திரியலாம் என அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். இதனால், தீவிர ரோந்து பணியில் வன அதிகாரிகள் ஈடு பட்டனர்.
புலி சிக்கிய இடத்திற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது புலி உறுமல் சத்தம் கேட்டது.
இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அங்கிருந்த ஒரு புலி குட்டியை பிடித்தனர். தொடர்ந்து சத்தம் கேட்டு கொண்டிருந்ததால் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர்.
அங்கு மேலும் 3 குட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. வலை வீசி அவைகளை பிடித்தனர்.


