/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நகை கடை கொள்ளையில் ஐந்து பேர் கைது; ரூ.87 லட்சம் பொருட்கள் மீட்பு நகை கடை கொள்ளையில் ஐந்து பேர் கைது; ரூ.87 லட்சம் பொருட்கள் மீட்பு
நகை கடை கொள்ளையில் ஐந்து பேர் கைது; ரூ.87 லட்சம் பொருட்கள் மீட்பு
நகை கடை கொள்ளையில் ஐந்து பேர் கைது; ரூ.87 லட்சம் பொருட்கள் மீட்பு
நகை கடை கொள்ளையில் ஐந்து பேர் கைது; ரூ.87 லட்சம் பொருட்கள் மீட்பு
ADDED : செப் 22, 2025 04:08 AM
பெங்களூரு : தங்கநகைகள் தயாரிக்கும் மையத்தில் கொள்ளை அடித்த வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 87 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.
மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் வைபவ் மோகன் காடே. இவர் உடுப்பி நகரின், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவர் சித்தரஞ்சன் சதுக்கத்தில், கட்டடத்தின் முதல் மாடியில், தங்க நகைகள் தயாரிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் மையம் வைத்துள்ளார். கடந்த 8ம் தேதி நள்ளிரவு, இந்த மையத்தின் பூட்டை உடைத்துஉள்ளே நுழைந்த மர்ம கும்பல், தங்கம், வெள்ளி நகைகளை திருடி சென்றது.
இது குறித்து, உடுப்பி நகர் போலீஸ் நிலையத்தில், வைபவ் மோகன் காடே புகார் அளித்தார். கொள்ளையர்களை கண்டுபிடிக்க, உடுப்பி நகர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் படிகேரா தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. பல கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையர்கள் மஹாராஷ்டிராவுக்கு தப்பியோடியதை கண்டுபிடித்தனர்.
அங்கு சென்று, விசாரணை நடத்தி கொல்லாபுராவின் மல்கிரோஸ் தாலுகா, நிம்காவ் என்ற இடத்தில் பதுங்கியிருந்த சுபம் தானாஜி சாதே, 25, பிரவீண் அப்பசாதே, 23, நீலேஷ் பாபு கஸ்தூரி, 19, சாகர் தத்தாத்ரேய கன்டகாலே, 32, பாகவ் ரோஹித் ஸ்ரீமந்த், 25, ஆகிய ஐந்து பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 74.88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை, 3.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி, 5 லட்சம் ரூபாய் உட்பட, 87.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.