/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மெட்ரோ மஞ்சள் பாதையில் ஜூலை 16, 17ல் இறுதி ஆய்வு மெட்ரோ மஞ்சள் பாதையில் ஜூலை 16, 17ல் இறுதி ஆய்வு
மெட்ரோ மஞ்சள் பாதையில் ஜூலை 16, 17ல் இறுதி ஆய்வு
மெட்ரோ மஞ்சள் பாதையில் ஜூலை 16, 17ல் இறுதி ஆய்வு
மெட்ரோ மஞ்சள் பாதையில் ஜூலை 16, 17ல் இறுதி ஆய்வு
ADDED : ஜூன் 29, 2025 11:08 PM
பெங்களூரு: ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா இடையேயான மெட்ரோ மஞ்சள் நிற பாதையில், ஜூலை 16, 17ம் தேதிகளில் இறுதி கட்ட சோதனை நடக்க உள்ளது.
பெங்களூரில் உள்ள தெற்கு பகுதிகளை மெட்ரோ ரயில் வழியாக அடைய, மஞ்சள் நிற பாதை அமைக்கப்பட்டது. பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. இந்த மெட்ரோ பாதை 18.8 கி.மீ., துாரம் கொண்டது. ஆர்.வி., சாலை மூலம் பொம்மசந்திரா வரை 16 மெட்ரோ ரயில் நிலையங்களை கொண்டு உள்ளன.
இந்த பாதை இயக்கத்திற்கு வரும் போது, பெங்களூரு தெற்கின் பல பகுதிகளை எளிதில் அடைய முடியும். இப்பாதையில், ஓட்டுநர் இல்லாத ரயில்களும் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு, தண்டவாள டெக்னீஷியன்கள், சுயாதீன பாதுகாப்பு மதிப்பீட்டாளர் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் சோதனை நடத்தினர். அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நடந்தது.
இருப்பினும், இறுதி கட்ட சோதனையை, மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் மேற்கொள்வார். இவர் சோதனை நடத்தி ஒப்புதல் அளித்தால் மட்டுமே, இப்பாதையில் ரயில்கள் இயங்க முடியும். இந்த முக்கியமான சோதனை, ஜூலை 15, 16ம் தேதிகளில் நடக்க உள்ளது.