Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சினிமா இயக்குநர் நாராயண் குடும்பம் மீது மருமகளின் வரதட்சணை புகாரால் பரபரப்பு

சினிமா இயக்குநர் நாராயண் குடும்பம் மீது மருமகளின் வரதட்சணை புகாரால் பரபரப்பு

சினிமா இயக்குநர் நாராயண் குடும்பம் மீது மருமகளின் வரதட்சணை புகாரால் பரபரப்பு

சினிமா இயக்குநர் நாராயண் குடும்பம் மீது மருமகளின் வரதட்சணை புகாரால் பரபரப்பு

ADDED : செப் 11, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, கன்னட திரையுலகின் பிரபல இயக்குநர் எஸ்.நாராயண் மற்றும் குடும்பத்தினர் மீது, அவரது மருமகள் பவித்ரா புகார் அளித்துள்ளார்.

கன்னட திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில், எஸ்.நாராயணும் ஒருவர். பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். தன் படங்களின் மூலம், மக்களுக்கு சமூக சீர்திருத்த கருத்துகளை கூறியவர். இவர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, வீட்டில் இருந்து தன் மருமகளை வெளியேற்றியதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, பெங்களூரின் ஞானபாரதி போலீஸ் நிலையத்தில், நாராயண் மருமகள் பவித்ரா, நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் கணவர் பவன், அதிகம் படிக்கவில்லை. அவர் தற்போது எந்த வேலையிலும் இல்லை. நானே உழைத்து, குடும்பத்தை நடத்துகிறேன். பவனும், அவரது தந்தையும் 'கலாசாம்ராட் பிலிம் இன்ஸ்டிடியூட்' அமைத்தபோது, என் நகைகளை அடமானம் வைத்து, பணம் கொடுத்தேன்.

நிறுவனம் நஷ்டமடைந்ததால், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தேன். அந்த கடனுக்கு இ.எம்.ஐ., கட்டி வருகிறேன். என் கணவர் பவன், அவரது தந்தை எஸ்.நாராயண், தாய் பாக்கியலட்சுமி அவ்வப்போது பணம் கேட்டு, எனக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். இதை நான் எதிர்த்ததால், வீட்டில் இருந்தே என்னை வெளியே தள்ளினர்.

இவ்வாறு புகாரில் பவித்ரா கூறியுள்ளார்.

புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருமகளின் குற்றச்சாட்டை, நாராயண் மறுத்துள்ளார். பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:

நாங்கள் பெண்களை மதிக்கும் கலாசாரத்தை கொண்டவர்கள். என் மீதும், மனைவி பாக்யலட்சுமி, மகன் பவன் மீதும், மருமகள் பவித்ரா சுமத்திய குற்றச்சாட்டு கள் பொய்யானவை. பவனும், பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண் டவர்கள். அவர்களின் காதலு க்கு, நான் தடை போடவில்லை. வீட்டுக்கு வந்த மருமகள், அந்த வீட்டின் கலாசாரம், பண்பாடுகளை புரிந்து கொண்டு வாழ வேண்டும். ஆனால் பவித்ரா அப்படி நடந்து கொள்ளவில்லை.

இதை நாங்கள் சுட்டிக்காட்டி, திருத்த முயற்சித்ததால் வீட்டில் பிரச்னை ஏற்பட்டது. உறவுகளில் விரிசல் வந்தது. எங்களின் பேச்சை மருமகள் கேட்பது இல்லை.

கலாசாரத்துடன் வாழும்படி நாங்கள் கூறியதே தவறாகிவிட்டது. எங்கள் வீட்டில் இருப்பது, மருமகளுக்கு தொல்லையாக இருந்ததால், அவருக்கு எங்கு சுகம், நிம்மதி கிடைக்கிறதோ அங்கு சென்றுள்ளார்.

என் மருமகள் பவித்ரா, வீட்டை விட்டு சென்று 14 மாதங்கள் ஆகின்றன. வரதட்சணை கொடுமை ஒழிய வேண்டும் என, படம் எடுத்தவன் நான்.

என் மீதே மருமகள் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். எங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், புகார் அளித்துள்ளார்.

என் வீட்டில் எட்டு பேர் வேலை செய்கின்றனர். எங்கள் வீட்டு பெண்கள், வேலைக்கு சென்று உழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் நாட்டில் பெண்கள், தங்கள் மாமியார், மாமனார், கணவரை கட்டிப்போட, வரதட்சணை வழக்கை அஸ்திரமாக பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us