/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பலி காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பலி
காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பலி
காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பலி
காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பலி
ADDED : மே 23, 2025 11:08 PM

ஹாசன்:கஜேந்திரபுரா கிராமத்தில், காட்டு யானை தாக்கியதில், பெண் தொழிலாளி பலியானார்.
ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின் கஜேந்திரபுரா கிராமத்தில் வசித்தவர் சந்திரம்மா, 45. இவர் அங்கிஹள்ளி கிராமத்தில் உள்ள கரண் என்பவரின் காபி தோட்டத்தில் கூலி வேலை செய்தார். நேற்று காலை 8:30 மணியளவில் வழக்கம் போன்று, பணிக்கு சென்றிருந்தார்.
காபி தோட்டத்தில், இவர் உட்பட 12 பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. 'சத்தம் எங்கிருந்து வருகிறது' என, பார்த்த போது யானைகள் கூட்டம், காபி தோட்டத்தில் புகுந்தது தெரிந்தது. பீதியடைந்த பெண்கள், அலறி கொண்டு ஓடினர். 11 பேர் அங்கிருந்து ஓடியதால் உயிர் தப்பினர். ஆனால் சந்திரம்மாவால் ஓட முடியவில்லை. யானையிடம் சிக்கினார்; அவரை யானை தாக்கியது.
இதில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த கிராமத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். 'காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இன்னும் எத்தனை பலி நடக்க வேண்டும். எங்கள் உயிருக்கு மதிப்பில்லையா. காட்டு யானைகளின் தொல்லைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்' என, கேள்வியெழுப்பினர்.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கிராமத்தினரை சமாதானம் செய்து அனுப்பினர்.