Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 9ம் வகுப்பு சிறுவனை அடித்து கொன்ற சக மாணவர் கைது

 9ம் வகுப்பு சிறுவனை அடித்து கொன்ற சக மாணவர் கைது

 9ம் வகுப்பு சிறுவனை அடித்து கொன்ற சக மாணவர் கைது

 9ம் வகுப்பு சிறுவனை அடித்து கொன்ற சக மாணவர் கைது

ADDED : மார் 10, 2026 06:00 AM


Google News
பல்லாரி: பல்லாரி தனியார் பள்ளி விடுதியில், ஒன்பதாம் வகுப்பு மாணவரை, இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சக மாணவர் கைது செய்யப்பட்டார்.

பல்லாரி டவுன் தாலுார் சாலையில் உள்ள குருகுலா என்ற தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்த, ஆந்திராவின் ஹேமந்த், 14, என்பவர், கடந்த 7ம் தேதி இரவு சக மாணவரால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

அத்துடன் அந்த மாணவர் தாக்கியதில் விடுதி வார்டன், மாணவ, மாணவியர் என, மேலும் எட்டு பேர் காயம் அடைந்தனர். கொலையாளி மாணவரை பிடிக்க, பல்லாரி எஸ்.பி., சுமன் பன்னேகர் தனிப்படை அமைத்தார்.

இந்நிலையில், ஆந்திராவுக்கு தப்பி செல்ல முயன்ற மாணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us