Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகளை திருடி என விமர்சித்த தந்தை

மகளை திருடி என விமர்சித்த தந்தை

மகளை திருடி என விமர்சித்த தந்தை

மகளை திருடி என விமர்சித்த தந்தை

ADDED : மே 16, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு:''என் மகள் சைத்ரா குந்தாபுராவும், அவரது கணவரும் திருடர்கள்,'' என அவரது தந்தை பாலகிருஷ்ணா நாயக் கூறி உள்ளார்.

'பிக்பாஸ்' பிரபலம் சைத்ரா குந்தாபுராவுக்கு, ஸ்ரீகாந்த் காஷ்யப் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதில் அவரது தந்தை பாலகிருஷ்ணா நாயக்கிற்கு விருப்பம் இல்லை என தகவல் பரவியது.

இந்நிலையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

என் மகள் சைத்ரா குந்தாபுரா. தன் திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை. நான் இந்த திருமணத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை. சைத்ராவும், அவரது கணவர் இருவரும் திருடர்கள்.

கோவிந்த் பூஜாரி வழக்கில் என் மகள் பணம் பெற்றது உண்மை தான். அந்த பணத்தை என் மனைவியும் பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சைத்ரா நேற்று தன் சமூக வலைதள பக்கத்தில், 'குடிகார தந்தைக்கு பிறந்த பிள்ளைகளுக்கே எனது வலி புரியும். என் தந்தைக்கு மதுபானம் வாங்கி கொடுத்தால், அவர் என்னை நல்லவர் என்பார்' என குறிப்பிட்டிருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us