/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகளை கடத்துவதாக மிரட்டிய ரவுடியை கொன்ற தந்தை கைது மகளை கடத்துவதாக மிரட்டிய ரவுடியை கொன்ற தந்தை கைது
மகளை கடத்துவதாக மிரட்டிய ரவுடியை கொன்ற தந்தை கைது
மகளை கடத்துவதாக மிரட்டிய ரவுடியை கொன்ற தந்தை கைது
மகளை கடத்துவதாக மிரட்டிய ரவுடியை கொன்ற தந்தை கைது
ADDED : ஜூன் 13, 2025 11:19 PM

பெங்களூரு: மகளை கடத்தப்போவதாக மிரட்டிய நிலையில், சமாதானம் பேச சென்றபோது ரவுடியை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, காடுகோடி விஜயலட்சுமி லே - அவுட்டில் வசித்து வந்தவர் புனித் என்ற நேபாளி புனித், 28. ரவுடியான இவர் மீது காடுகோடி போலீசில் கொலை, கொலை முயற்சி உட்பட ஏழு வழக்குகள் உள்ளன.
ஜூன் 10ல் இரவு வெளியே சென்ற புனித்தை நான்கு பேர், அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, ஸ்ரீகாந்த், மகேஷ், ராஜேஷ், சுமந்த் ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியது:
மகேஷிடம் புனித் 40,000 ரூபாய் மதிப்புள்ள பைக் வாங்கி இருந்தார். இதற்கான பணத்தைத் தராமல் புனித் நாட்களை கடத்தினார். ஒரு கட்டத்தில், புனித்திடம் நேரடியாக சென்று மகேஷ், பணம் கேட்டுள்ளார். அதற்கு புனித், 'பணம் கொடுக்க முடியாது. இனி நான் கேட்கும்போது எனக்கு பணத்தை தர வேண்டும். இல்லை என்றால், உன் மகளை கடத்தி விடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.
பயந்துபோன மகேஷ், புனித்துக்கு தெரிந்த தன் நண்பர் ஸ்ரீகாந்த் மூலம் சமரசம் செய்ய முயன்றார். அதற்கு சம்மதிக்காத புனித், இருவரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
பின், ஜூன் 10ம் தேதி இரவு, புனித், தனது நண்பர் அர்பாசுடன் மகேஷ் வீட்டுக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில், மகேசை, ஆயுதங்களால் புனித் தாக்கினர். இந்நேரத்தில் புனித்திடம் இருந்த அரிவாளை மகேஷ் பறித்தார். இதை பார்த்த அர்பாஸ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தப்ப முயன்ற புனித்தை, மகேஷ் அரிவாளால் தாக்கியபோது, அங்கு வந்த மகேசின் நண்பர்கள் ஸ்ரீகாந்த், ராஜேஷ், சுமந்த் ஆகியோரும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.