Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திறக்கப்படாத இந்திரா உணவகம் விவசாயிகள் சங்கம் கண்டனம்

திறக்கப்படாத இந்திரா உணவகம் விவசாயிகள் சங்கம் கண்டனம்

திறக்கப்படாத இந்திரா உணவகம் விவசாயிகள் சங்கம் கண்டனம்

திறக்கப்படாத இந்திரா உணவகம் விவசாயிகள் சங்கம் கண்டனம்

ADDED : மே 15, 2025 11:21 PM


Google News
முல்பாகல்: இந்திரா உணவகத்துக்காக கட்டடம் கட்டி ஏழு மாதங்கள் முடிந்தும், திறக்கப்படாமல் இருப்பதற்கு கோலார் மாவட்ட விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சங்க பொதுச் செயலர் பங்காரி மஞ்சுநாத் அளித்த பேட்டி:

மாநிலத்தில் பல நகரங்களில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்க இந்திரா உணவகம் திறக்கப் பட்டுள்ளது. முல்பாகலிலும் இந்த மலிவு விலை உணவகம் வேண்டும் என்று பலதரப்பில் கோரி வருகின்றனர்.

இதற்காக முல்பாகல் தாலுகா பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், ஏழு மாதங்களுக்கு முன்பு கட்டடம் கட்டப் பட்டது.

ஆனால், அதனை திறக்கவில்லை. இதுகுறித்து கர்நாடக அரசுக்கு, மாநில விவசாயிகள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு சிட்டியில் வார்டுக்கு ஒரு மலிவு விலை உணவகம் இருக்கும் போது முல்பாகல் தொகுதியில் ஒரு உணவகம் திறக்க கூடாதா. ஓட்டல்களில் உணவுப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் தான் மலிவு விலை உணவகத்தை திறக்க வலியுறுத்துகிறோம். விரைவில் திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us