/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பைக் மீது வேன் மோதல் நிச்சயிக்கப்பட்ட ஜோடி பலி பைக் மீது வேன் மோதல் நிச்சயிக்கப்பட்ட ஜோடி பலி
பைக் மீது வேன் மோதல் நிச்சயிக்கப்பட்ட ஜோடி பலி
பைக் மீது வேன் மோதல் நிச்சயிக்கப்பட்ட ஜோடி பலி
பைக் மீது வேன் மோதல் நிச்சயிக்கப்பட்ட ஜோடி பலி
ADDED : செப் 11, 2025 11:39 PM

ஷிவமொக்கா: திருமணம் நிச்சயமான பின், உறவினர் வீட்டுக்கு சென்ற இளைஞரும், இளம்பெண்ணும் விபத்தில் உயிரிழந்தனர்.
ஷிவமொக்கா மாவட்டம், சொரபாவின் கங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் பசவனகவுடா, 24. இவருக்கும், ஷிகாரிபுராவின் மட்டிகோட் கிராமத்தை சேர்ந்த ரேகா, 22, என்பவருக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த மாதம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த 9ம் தேதி ஷிகாரிபுராவில் உள்ள தன் தாய் மாமா வீட்டுக்கு பசவனகவுடா வந்திருந்தார். மறுநாள் காலையில், திருமணம் செய்து கொள்ள உள்ள ரேகாவின் கிராமத்துக்கு சென்று, அவரை அழைத்துக் கொண்டு பைக்கில் கோவிலுக்குச் சென்றார். சுவாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அம்பரகொப்பா கிராஸ் கிட்டூர் ராணி சென்னம்மா உண்டு உறைவிடப் பள்ளி அருகே வந்தபோது, சரக்கு வாகனம் இவர்களின் பைக் மீது மோதியது.
படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.