Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வேலை கொடுத்த உரிமையாளர் கொலை மோதிரத்துக்காக கை விரல் வெட்டி எடுப்பு

வேலை கொடுத்த உரிமையாளர் கொலை மோதிரத்துக்காக கை விரல் வெட்டி எடுப்பு

வேலை கொடுத்த உரிமையாளர் கொலை மோதிரத்துக்காக கை விரல் வெட்டி எடுப்பு

வேலை கொடுத்த உரிமையாளர் கொலை மோதிரத்துக்காக கை விரல் வெட்டி எடுப்பு

ADDED : ஜூன் 01, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
ஹாசன்: நகைக்காக கொலை செய்தபோது, மோதிரத்தை கழற்றுவதற்காக வேலை கொடுத்த உரிமையாளரின் விரலையே வெட்டி எடுத்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹாசன் மாவட்டம், அரசிகெரே தாலுகாவின் சுப்ரமண்யநகர் லே - அவுட்டில் வசித்தவர் விஜய்குமார், 46. கட்டட கட்டுமான தொழிலதிபர். இவர் ஷிவமொக்கா - பெங்களூரு சாலையில், சீனிவாஸ் என்பவருக்கு கட்டடம் கட்டி வந்தார்.

இந்த கட்டடத்தில், பீஹாரை சேர்ந்த விக்ரம் என்பவரின் குடும்பத்தினருக்கு, வேலை கொடுத்தார். இவர்களுக்கு தன் வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்திருந்தார்.

ஒரு வாரத்துக்கு முன்பு, தன் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு விக்ரம் சென்றார். தன் மனைவி, பிள்ளைகளை அங்கேயே விட்டு விட்டு, சச்சின் என்ற நண்பருடன் ஹாசனுக்கு திரும்பினார்.

அவருக்கும் விஜய்குமார், அதே கட்டடத்தில் வேலை கொடுத்தார்.

நேற்று முன் தினம் இரவு, விஜய்குமாருக்கு போன் செய்த விக்ரம், 'சச்சின் என்னை தாக்குகிறார்; என்னை காப்பாற்றுங்கள்' என அழைத்தார்.

இதனால் பதற்றமடைந்த விஜய்குமார், கட்டுமான பணிகள் நடக்கும் இடத்துக்கு சென்றார். செல்வதற்கு முன்பு கட்டட உரிமையாளர் சீனிவாசிடம் தகவல் கூறினார். அங்கு சென்று பார்த்துவிட்டு, போன் செய்வதாக கூறியிருந்தார்.

நீண்ட நேரமாகியும் அவரிடம் இருந்து போன் வரவில்லை. ஏதாவது பெரிய பிரச்னை ஏற்பட்டிருக்குமோ என, சீனிவாஸ் கவலைப்பட்டார்.

தன் கட்டடத்தில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தார். விக்ரமும், சச்சினும் விஜய்குமாரின் பைக்கில் ஏறி செல்வதை கண்டு சந்தேகம் ஏற்பட்டது.

சீனிவாஸ் உடனடியாக கட்டட பணிகள் நடக்கும் இடத்துக்கு சென்றார். அங்கு விஜய்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து, அரசிகெரே போலீஸ் நிலையத்தில், சீனிவாஸ் புகார் செய்தார். அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

விக்ரமும், சச்சினும் தங்க நகையை கொள்ளையடிக்கும் நோக்கில், பொய் சொல்லி விஜய்குமாரை பணியிடத்துக்கு வரவழைத்து, இரும்புக் கம்பியால் தாக்கி, கொலை செய்துள்ளனர்.

அவர் அணிந்திருந்த தங்கநகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

விரலில் இருந்த மோதிரத்தை கழற்ற முடியாததால், விரலையே வெட்டி எடுத்துள்ளனர். அவர்களை பற்றி விசாரிக்க, பீஹார் செல்ல போலீசார் தயாராகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us